"மோடி தான் ஒரே தலைவர்! உக்ரைன் போரை அவரால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்!" மெக்சிகோ கோரிக்கை
வாஷிங்டன்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களாக தொடரும் நிலையில், இது தொடர்பாக மெக்சிகோ ஐநா சபையில் சில முக்கிய கோரிக்கையை முன்வைத்து உள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப். மாதம் இறுதியில் தொடங்கியது. சில நாட்களில் இந்த போர் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போர் பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருப்பினும், இந்தப் போர் இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இந்தச் சூழலில் இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக ஐநா சபையில் மெக்சிகோ சில முக்கிய கோரிக்கையை முன்வைத்து உள்ளது.

உக்ரைன் போர்
அதாவது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க ஐநாவிடம் மெக்சிகோ கோரிக்கை விடுத்து உள்ளது. உக்ரைன் தொடர்பான விவாதம் ஐ.நா பாதுகாப்பு சபையில் நடந்து வரும் நிலையில், மெக்சிகோவின் வெளியுறவு துறை அமைச்சர் மார்செலோ லூயிஸ் இதனை தெரிவித்தார்.

மோடி
சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22ஆவது மாநாட்டில் புதினைச் சந்தித்த மோடி, "இந்த யுகம் போருக்கானது இல்லை" என்று கூறி இருந்தார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்தை அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து என பல உலக நாடுகள் வரவேற்று இருந்த நிலையில், மெக்சிகோ இப்போது இந்த கோரிக்கையை ஐநா சபையில் முன்மொழிந்து உள்ளது.

மெக்சிகோ கோரிக்கை
இது குறித்து மார்செலோ லூயிஸ் பேசுகையில், "அமைதியான சூழலை அடைய சர்வதேச சமூகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மெக்சிகோ நம்புகிறது. இது தொடர்பாக மெக்சிகோ அதிபர் கோரிக்கை ஒன்றை முன்மொழிந்து உள்ளார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் மத்தியஸ்த முயற்சிகளை வலுவாக எடுக்க வேண்டும்.

இந்திய பிரதமர்
இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்ட தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை உருவாக்க வேண்டும். புதிய பேச்சுவார்த்தை வழிமுறைகளை உருவாக்குவது, நம்பிக்கையை வளர்ப்பது, பதட்டங்களைக் குறைப்பது உள்ளிட்டவை இந்த குழுவின் நோக்கமாக இருக்கும். அமைதியை ஏற்படுத்த இப்படியொரு குழுவை உருவாக்க தேவையான அனத்து உதவிகளையும் மெக்சிகோ அரசு தொட்ந்து செய்யும்.

ஒரே ஆப்ஷன்
போரை நிறுத்துவதற்கான நேரம் இது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். இந்த விவகார்ததில் பாதுகாப்பு கவுன்சிலால் இதுவரை அமைதியை நிலைநாட்ட முடியவில்லை. இந்த விவகாரத்தில் வெறுமனே புலம்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பாதுகாப்பு கவுன்சில் செயல்படாமல் இருக்க என்ன காரணங்கள் என அனைவருக்கும் தெரியும். அதை சரி செய்வது நம் கையில்தான் உள்ளது. அதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரம் இது" என்று அவர் தெரிவித்தார்.

உக்ரைன் போர்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பல மாதங்களாக தொடரும் நிலையில், மெக்சினோவின் இந்த கருத்துகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் போர் விவகாரத்தில் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்த போதிலும், இந்தியா நடுநிலையான ஒரு நிலைப்பாட்டையே எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications