ஹாலிவுட் படம் பாணியில்.. விண்கலத்தை ஏவி கோள் மீது மோத வைக்கும் நாசா.. திட்டம் ரெடி!
வாஷிங்டன்: 1998ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படமான "ஆர்மகெடான்," நியாபகம் உள்ளதா. புரூஸ் வில்லிஸ் மற்றும் பென் அஃப்லெக் ஆகியோர் பூமியை காப்பாற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
இப்போது பூமி அத்தகைய உடனடி ஆபத்தை எதிர்கொள்ளவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு, நாசா விண்கல மோதல் சோதனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
மணிக்கு 15,000 மைல் (24,000 கிமீ) வேகத்தில் செல்லும் விண்கலத்தை மோதி அழிக்கச் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

ஒத்திகை பார்ப்பு
வருங்காலத்தில் பூமி மீது மோதி அச்சுறுத்த வாய்ப்புள்ள ஒரு சிறு கோளின் போக்கைத் திசைதிருப்ப இந்த ஒத்திகை நல்ல வழிதானா, பலன் கொடுக்குமா என்பதை, இந்த மோதல் ஆய்வு மூலம், நாசா பிராக்டிக்கலாக செய்து பார்க்க உள்ளது.
330 மில்லியன் டாலர் மதிப்பில் DART என்ற அழைக்கப்படும் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ராக்கெட்டில் விண்கலம்
DART விண்கலம் கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்தில் இருந்து நவம்பர் 23 அன்று பசிபிக் நேரப்படி இரவு 10:20 மணிக்கு SpaceX Falcon 9 ராக்கெட்டில் ஏவப்பட உள்ளது. பூமியிலிருந்து 6.8 மில்லியன் மைல் தொலைவில் உள்ள சிறுகோள் தாக்கம் செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 1 க்கு இடையில் ஏற்படும்.
Recommended Video

முன்னெச்சரிக்கை
நாசாவின் கிரக பாதுகாப்பு அதிகாரி ஜான்சன் இதுபற்றி கூறுகையில்,, பூமிக்கு அருகிலுள்ள 27,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது எதுவும் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருந்த சோதனைகளை செய்து பார்க்க உள்ளோம் என்றார்.

எப்படி செயல்படும்
ஒரு சிறுகோள் பூமியை நோக்கிச் சென்றால், அதைத் திசைதிருப்ப எவ்வளவு வேகம் தேவை என்பதை அறிவியலாளர்கள் புரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது. திசைதிருப்பலின் அளவு சிறு கோள் எவ்வளவு நுண்துளைகள் கொண்டது என்பதை பொருத்து மாறுபடுமாம்.

திசை திருப்ப திட்டம்
கோள் மீது டார்ட் விண்கலம் இந்த மோதலின்போது, 1,210 பவுண்டுகள் எடையுள்ளதாக இருக்கும். இது அந்த சிறுகோளை அழிக்காது. அதேநேரம், பூமியை நோக்கி வரும் கோள் பாதையை திருப்பி விட்டு பூமியை ஆபத்திலிருந்து காப்பாற்றும் என்று, விஞ்ஞானி சாபோட் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications