வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. எவ்வளவு பெரிசு! பூமிக்கு கிட்ட வரும் ஆஸ்டிராய்டு! மனிதர்களுக்கு ஆபத்தா? நாசா வார்னிங்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சுமார் 2 கிமீ அகலமுள்ள மிகப் பெரிய ஆஸ்டிராய்டு குறித்து நாசா முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படும் சிறுகோள்கள் நமது விண்வெளியைச் சுற்றிக் கொண்டு இருக்கும். இப்படி விண்வெளியில் சுற்றி வரும் ஆஸ்டிராய்டுகள் பெரும்பாலான நேரங்களில் பூமிக்கு எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தாது.

“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?

சில அரிய சமயங்களில் இந்த ஆஸ்டிராய்டுகள் பூமியின் சுற்றுவட்டார பாதைக்கு அருகே வரும். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படும் ஆஸ்டிராய்டுகள் பூமியை அடையும் முன்பு, வெப்பத்தில் பஸ்பம் ஆகிவிடும்.

ஆஸ்டிராய்டு

ஆஸ்டிராய்டு

இந்நிலையில், சுமார் 2 கிலோமீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய ஆஸ்டிராய்டு ஒன்று பூமிக்கு மிக அருகே வர உள்ளது. வரும் மே 27ஆம் தேதி இந்த ஆஸ்டிராய்டு பூமியில் இருந்து வெறும் 40,24,182 கிமீ தொலைவில் வர உள்ளது. பூமிக்கு அருகே வரும் போது அது மணிக்கு 47,232 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்ற போதிலும், இதை அபாயகரமானதாக நாசா வகைப்படுத்தியுள்ளது.

 1989 JA

1989 JA


பூமிக்கு அருகே வரும் இந்த ஆஸ்டிராய்டு முதலில் கடந்த 1989இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இது 1989 JA என்று பெயரிடப்பட்டது. கடந்த 2013இல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து 6 ரஷ்ய நகரங்களில் சிறு சேதங்களை ஏற்படுத்திய செல்யாபின்ஸ்க் ஆஸ்டிராய்டை போன்றது தான் இந்த 1989 JA ஆஸ்டிராய்டு. இருப்பினும் செல்யாபின்ஸ்க் ஆஸ்டிராய்டை போல இல்லாமல் இது பூமிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 பூமிக்கு மிக அருகில்

பூமிக்கு மிக அருகில்

இது பூமியை 40,24,182 கிமீ தொலைவில் கடந்து செல்லும். இது பார்க்கத் தொலைதூரம் போலத் தோன்றினாலும் விண்வெளியில் இது மிகக் குறைவான தூரம் தான். இதன் காரணமாகவே இதை ஆபத்தான நிகழ்வாக நாசா வகைப்படுத்தி உள்ளது. இந்த ஆஸ்டிராய்டு அடுத்து 200 ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் வருவது இந்த நிகழ்வாகத் தான் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 ஆஸ்டிராய்டு என்றால் என்ன

ஆஸ்டிராய்டு என்றால் என்ன

ஆஸ்டிராய்டு என்பது சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவான போது, எஞ்சிய பாறைத் துண்டுகள் ஆகும். இதுபோன்ற ஆஸ்டிராய்டுகளால் பூமிக்கு பெரும்பாலும் எவ்வித ஆபத்தும் இல்லை. பூமியில் இருந்து சூரியனுக்கான தூரத்தை விட 1.3 மடங்கு குறைவான தூரத்தில் ஆஸ்டிராய்டு பூமியை நெருங்கும் போது, அது கவலைக்குரியதாகக் கருதப்படும்.

நேரலை

நேரலை

பூமியைக் கடந்த பிறகு, இந்த ஆஸ்டிராய்டு சூரியனைச் சுற்றி ஒரு வருட கால சுற்றுப்பாதையில் சுற்றும் என்பதால் இது அப்பல்லோ ஆஸ்டிராய்டு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்டிராய்டு அடுத்து வரும் செப். 2029ஆம் ஆண்டு பூமிக்கு அருகே வரும். அதன் பின்னர் 2055 மற்றும் 2062 ஆகிய ஆண்டுகளில் இந்த ஆஸ்டிராய்டு பூமிக்கு அருகே வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் மே 27இல் இந்த ஆஸ்டிராய்டு அருகே வரும் நிகழ்வை The Virtual Telescope Project என்ற தளத்தில் நேரலையில் பார்க்க முடியும்.

English summary
Two kilometer-wide asteroid is set to come close to Earth on May 27: (பூமிக்கு மிக அருகில் வரும் 2 கிமீ அகலமுள்ள ஆஸ்டிராய்டு) Big asteroid is going to pass earth at a staggering speed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X