சவுதி மட்டுமில்லை இஸ்ரேலையும் போட்டு தள்ள முடியும்.. ஹவுதிகளின் ஏவுகணைகளுக்கு உதவும் சீனா.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தான் சவுதி அரேபியா மட்டுமின்றி இஸ்ரேலையும் தாக்கி அழிக்கும் வகையில் சீனா உதவியுடன் நவீன ரக ஏவுகணைகளை ஹவுதிகள் தயாரிப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ''நாடுகளுக்கு இடையேயான மோதலை 'கான்ஃப்ளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ட்' என்ற குழுவினர் கண்காணித்து தாக்குதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் பின்னணியை ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

saudi arabia china houthis

அதன்படி ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் சீனாவில் இருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு நவீன ஏவுகணைகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஏவுகணைகள் ஈரானின் பாலிஸ்டிக் ரக ஏவுகணையான 'கெய்பர் செகான்' மாதிரியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏவுகணையால் சுமார் 1,200 மைல்கள் தூரம் வரை சென்று துல்லியமாக இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். இதனால் ஹவுதிகளால் சவுதி அரேபியா மட்டுமின்றி இஸ்ரேலின் அனைத்து இடங்களையும் தாக்க முடியும்'' என கூறப்பட்டுள்ளது.

ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஈரானை போல் ஹவுதிகளும், இஸ்ரேலை எதிரியாக பார்க்கின்றன. இருதரப்புக்கும் பிரச்சனை உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இவர்கள் இடையே மோதல் வரலாம். தற்போது சவுதி அரேபியாவை ஹவுதிகள் தாக்கி வருகின்றன. இதற்கு சவுதி அரேபியாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த பதிலடி தாக்குதலில் சவுதி அரேபியாவிற்கு உதவியாக இஸ்ரேல் இணைய தயாராக உள்ளது. இதற்கான அனுமதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா வழியாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் கோரினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இப்படி இஸ்ரேல் - ஹவுதிகள் இடையே மோதல் வெடிக்கும் சூழலில் உள்ளது. இதனை மனதில் வைத்து தான் இஸ்ரேலையும் தாக்கும் வகையில் சீனாவின் பாகங்களை பயன்படுத்தி ஹவுதிகள் புதிய ஏவுகணைகளை வடிவமைத்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+