வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பென்சில்வேனியாவில் திருப்பம்.. டிரம்பை நெருங்கும் ஜோ பிடன்.. இங்கு வென்றால் போதும், அதிபர்தான்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: திடீர் திருப்பமாக பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு, கடும் போட்டி கொடுத்து வருகிறார் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன்.

இந்த மாகாணத்தில் மட்டும் ஜோ பிடன் வெற்றி பெற்று விட்டால் வெள்ளை மாளிகையை டொனால்ட் ட்ரம்ப் காலி செய்துவிட்டு மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிவிட வேண்டியதுதான்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்ததும், தொலைக்காட்சியில் தோன்றிய டொனால்ட் ட்ரம்ப், தங்கள் தரப்பு வெற்றி பெற்றதாக பெருமையுடன் தெரிவித்தார்.

ஒரு வார்த்தை மாறாமல்.. டிரம்பிற்கு திருப்பிக் கொடுத்த கிரேட்டா.. அசிங்கப்பட்ட அதிபர்.. வைரல் டிவிட்!ஒரு வார்த்தை மாறாமல்.. டிரம்பிற்கு திருப்பிக் கொடுத்த கிரேட்டா.. அசிங்கப்பட்ட அதிபர்.. வைரல் டிவிட்!

டிரம்ப் பெருமிதம்

டிரம்ப் பெருமிதம்

அதற்கு அவர் ஆணித்தரமாக முன்வைத்த கருத்து பென்சில்வேனியா மாகாணத்தில் கூட நாம் முன்னேறி வருகிறோம் என்பதுதான். எதற்காக அவர் பென்சில்வேனியா மாகாணத்தை குறிப்பிட்டுச் சொன்னார்? வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஏன் அந்த மாகாணத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்.

ஜோ பிடன் முன்னிலை

ஜோ பிடன் முன்னிலை

தற்போதைய நிலையில் ஜோ பிடன் 264 பிரதிநிதிகள் ஓட்டுகளும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர். பென்சில்வேனியா உட்பட ஆறு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் அதிகமாக பிரதிநிதிகள் ஓட்டு இருக்கக்கூடிய மாகாணம் பென்சில்வேனியா.
அங்கு மொத்தம் 20 ஓட்டுகள் உள்ளன.

பென்சில்வேனியாவில் கடும் போட்டி

பென்சில்வேனியாவில் கடும் போட்டி

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது பென்சில்வேனியா மாகாணத்தில் 48.8% வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் இந்த 20 பிரதிநிதிகள் ஓட்டுக்களை ஈட்டினார். அவர் 29 லட்சத்து 12 ஆயிரத்து 941 பொது வாக்குகள் பெற்றார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அப்போது களமிறங்கிய ஹிலாரி கிளின்டன் 28 லட்சத்து 44 ஆயிரத்து 705 ஓட்டுக்கள் வாங்கினார். அதாவது பொதுமக்கள் வழங்கிய வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால் டிரம்புக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்தார் ஹிலாரி கிளிண்டன்.

 ஜோ பிடன் அபாரம்

ஜோ பிடன் அபாரம்

இப்படி நெருக்கமான ஒரு போட்டி நிலவிய மாகாணம் என்பதாலும், அங்கு 20 பிரதிநிதிகள் ஓட்டுக்கள் இருப்பதாலும், இந்த மாகாணம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாகாணத்தில் ஆரம்பத்தில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றது உண்மைதான். ஆனால் கடந்த பல மணி நேரமாக, ட்ரம்புக்கு ஜோ பிடன் கடும் போட்டி கொடுத்து வருகிறார்.

வெற்றி முக்கியம்

வெற்றி முக்கியம்

வெறுமனே, புள்ளி 3 சதவீதம் அளவுக்கான வாக்குகள் வித்தியாசம்தான் இருவருக்கும் இருக்கிறது. மிக மிக நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறார் ஜோ பிடன். இதே நிலை நீடித்தால் ஜோ பிடன், பென்சில்வேனியாவை கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பிறகு மற்ற மாகாணங்களில் ரிசல்ட் எவ்வாறு வந்தாலும் பரவாயில்லை. வெள்ளை மாளிகை நோக்கி நடக்க ஆரம்பிக்கலாம் ஜோ பிடன். எனவே பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முடிவுகள் பற்றி ஒட்டுமொத்த உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

English summary
Pennsylvania will decide who will become president of America as Joe Biden is nearing Donald Trump in the vote share. Total 20 electoral votes are there in Pennsylvania.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X