வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்க் தேவையில்லை என்று சொன்னாரே பிரேசில் அதிபர் போன்சோனாரோ.. அவருக்கு கொரோனா! குணமடைய மோடி வாழ்த்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிரேசில் நாட்டு அதிபர் போன்சோனாரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் அனைத்திலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால், அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, முதல் 3 இடங்களில் உள்ளன.

பிரேசிலில் சுமார் 16.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 65,487ஆக அதிகரித்துள்ளது.

மாஸ்க் போட கூடாது என்றவர்

மாஸ்க் போட கூடாது என்றவர்

கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருந்தாலும், மக்கள் சமூக விலகல் பின்பற்ற வேண்டாம், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் போல்சோனாரோ. இது வெறும் சளிக் காய்ச்சல் என்றும் கூறினார். மலேரியாவுக்கான மாத்திரைகளை பிரேசிலுக்கு, இந்தியா அனுப்ப சம்மதித்தபோது, அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்று லட்சுமணனை காப்பாற்றியது போல இந்திய பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று புகழ்ந்துரைத்தார்.

பொருளாதார பாதிப்பு

பொருளாதார பாதிப்பு

லாக்டவுனை பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக கையில் எடுத்த நிலையில், மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட பொருளாதார முடக்கத்தால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றவர் போல்சோனோரா. மேலும் போல்சோனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. கூட்டத்தில் அசால்டாக நடந்து வந்தார்.

விளையாட்டு வீரர் உடம்பு

விளையாட்டு வீரர் உடம்பு

தன்னுடையது விளையாட்டு வீரரின் உடல். கொரோனா வந்தாலும், காய்ச்சலோடு சரியாகிவிடும் என்று அவரே சர்டிபிகேட்டும் கொடுத்துக் கொண்டார். இடைஇடையே 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது இவருக்கு உறுதியாகவில்லை. தற்போது நடந்த பரிசோதனையில், அதிபருக்கு கொரோனா உறுதியானது.

மோடி வாழ்த்து

மோடி வாழ்த்து

இதையடுத்து, முகக் கவசம் அணிந்தபடி, இந்த தகவலை பத்திரிக்கையாளர்களிடம், போன்சோனாரா தெரிவித்தார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய நண்பர் போன்சோனாரோ விரைவில் குணமடைய வேண்டும் என்று, பிரார்த்தனை செய்கிறேன் மற்றும் வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi on Wednesday tweeted best wishes for Brazil president Jair Bolsonaro, who has tested positive for coronavirus disease Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X