வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை... நாசா அசத்தல்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் முள்ளங்கி பயிர் வளர்த்து அதனை வெற்றிகரமாக நாசா அறுவடை செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியிட்டது.

விண்வெளி வீரர்களுக்கு ப்ரெஷ் ஆன உணவு அளிக்க வசதியாக சோதனை முறையில் இதனை பயிரிட்டு அறுவடை செய்துள்ளது நாசா.

Radish Harvest at the International Space Station

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புவியீர்ப்பு வளையத்துக்கு மேலே அமைந்துள்ளதால் அங்கு புவியீர்ப்பு சக்தி கிடையாது. அங்கு மனிதர்கள் கவச உடை இன்றி தங்கி இருக்க முடியாது. அங்கு தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு ப்ரெஷ் ஆன உணவு அளிக்க வசதியாகக் காய்கறிகளை விண்வெளி நிலையத்தில் பயிரிட நாசா முடிவு செய்தது. அதையொட்டிசோதனை முறையில் முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு... கனடா பிரதமர் மீண்டும் கருத்து!அமைதியான போராட்டத்துக்கு ஆதரவு... கனடா பிரதமர் மீண்டும் கருத்து!

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்டியில் நன்கு உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் முள்ளங்கி பயிர்கள் வளர்க்கப்பட்டன. பயிர்களுக்கு வெப்பம் ஊட்ட சிவப்பு மற்றும் நீல ஒளி உமிழும் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்த பயிர்கள் வளர்ச்சியை அமெரிக்காவில் உள்ள விண்வெளி கட்டுப்பாடு அறையில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வெற்றிகரமாக வளர்ந்துள்ள முள்ளங்கி தற்போது ௨௭ நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. இந்த முள்ளங்கி சாகுபடி குறித்தது நாசா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

English summary
NASA has successfully grown a radish crop at the International Space Station and harvested it. Posted a related video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X