வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் சில மணி நேரத்தில்... மொத்த நுரையீரலையே காலி செய்யும் கொரோனா.. ஆய்வில் அதிர்ச்சி முடிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் மனிதர்களின் நுரையீரலில் புகுந்த சில மணி நேரத்திலேயே, அங்கிருக்கும் செல்களை முழுவதுமாக அழித்துவிடுவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கி கொரோனா வைரசின் தாக்கம் தற்போது வரை முடியவில்லை. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளாலும்கூட கொரோனாவின் பிடியிலிருந்து தப்பவில்லை.

கொரோனா தொற்று புதிய வகை வைரஸ் என்பதால் இந்த வைரஸ் குறித்துத் தெரிந்துகொள்ள உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் போல வேறு வைரஸ் பாதிப்புகள் ஏற்படும்பட்சத்தில் அதை எளிதில் சமாளிக்க இந்த ஆய்வுகள் உதவும்.

புதிய ஆய்வு

புதிய ஆய்வு

கொரோனா வைரஸ் மனிதர்கள் உடலில் நுழைந்ததும், அது முதலில் பாதிப்பது நுரையீரலைதைான். அது எப்படி நுரையீரலைப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நுரையீரல் செல்களில் கொரோனா வைரஸ் செலுத்தப்பட்டது.

நுரையீரலைப் பாதிக்கும் கொரோனா

நுரையீரலைப் பாதிக்கும் கொரோனா

நுரையீரல் செல்களில் புகுந்த ஒரு மணி நேரத்தில் கொரோனா வைரஸ், அதைப் பாதிக்கத் தொடங்கிவிடுகிறது. எந்த வைரசும் இவ்வளவு விரைவாக நுரையீரலை பாதிக்கத் தொடங்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக, வைரஸ்களால் தன்னை தானே நகலெடுத்துக் கொள்ள முடியாது. இதனால் பாதிக்கும் செல்களை தங்களின் வாழ்விடமாக மாற்றிக்கொள்ளும் வைரஸ், அதன் பின் தன்னை தானே நகலெடுத்துக்கொள்ளும்

எபோலாவை விட மோசமான பாதிப்பு

எபோலாவை விட மோசமான பாதிப்பு

நுரையீரலில் புகும் கொரோனா வைரஸ், மூன்று முதல் ஆறு மணி நேரங்களில் செல் சுவர்களைப் பாதிக்கத் தொடங்குவதாக ஆராயாச்சியளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் நுரையீல்களின் செல்களையே ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் மாற்றுகின்றன. எபோலா போன்ற கொடிய வைரஸ்கள் கூட இந்த குறைந்த நேரத்தில் செல் சுவர்களைச் சேதப்படுத்தத் தொடங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிமோனியா

நிமோனியா

நமது உடலில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸிஜனை வெளியேற்றி, ஆக்ஸினை ரத்தத்திற்குச் செலுத்தும் பணிகளை நுரையீரல்தான் மேற்கொள்ளும். மேலும், செல்களை சேதப்படுத்தும் கொரோனா வைரஸ் மிக வேகமாகத் தனது பாதிப்புகளை அதிகமாக்குகிறது. இதன் காரணமாக மிக விரைவிலேயே மொத்த நுரையீரலும் பாதிக்கப்பட்டு நிமோனியா ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 3.95 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலகெங்கும் சுமார் 10.35 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று மட்டும் சுமார் 4.52 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 22.37 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பிரிட்டன் நாடுகள் உள்ளன

English summary
Following months of interdisciplinary research assessing tens of thousands of lung cells infected with the novel coronavirus, scientists have created one of the most comprehensive maps to date of the molecular activities that are triggered inside these cells at the onset of the viral infection, an advance that may lead to the development of new drugs to combat COVID-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X