சீனாவில் பரவும் கொரோனா உயிரை குடிப்பவை அல்ல.. "ரிலாக்ஸா இருங்க".. உறுதியாக கூறும் வல்லுனர்
வாஷிங்டன்: "சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது உண்மைதான். இருந்தபோதிலும், அவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வீரியம் கொண்டது அல்ல" என்று வாஷிங்டன் பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானி டாக்டர் க்ரிஸ் முர்ரே உறுதிபட தெரிவித்துள்ளார்.
பலரும் கூறுவதை போல சீனாவில் பரவுவது, கொரோனா வகையின் புதிய திரிபு கிடையாது என்றும், மாறாக, ஓமிக்ரான் வகை வைரஸ் தொற்றுதான் எனவும் முர்ரே தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவி வரும் கொரோனா மிகவும் ஆபத்தானது என பல விஞ்ஞானிகள் கூறி வரும் நிலையில், முர்ரேவின் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மீண்டும் மிரட்டும் கொரோனா
தற்போது சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி, அங்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. இது உலக நாடுகளை மீண்டும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், கடந்த முறையை போலவே இப்போதும் தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து சீனா வாய் திறக்க மறுத்து வருகிறது.

பயமுறுத்தும் விஞ்ஞானிகள்
சீனாவில் கொரோனா மீண்டும் பரவுவதே ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலில், ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் ஒவ்வொரு விதமாக இந்த வைரஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றன. சீனாவில் பரவுவது கொரோனா புதிய திரிபு என்றும், இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என ஒருதரப்பு விஞ்ஞானிகளும், இது நேரடியாக மூளையை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸ் என மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளும் கூறி பீதியை அதிகப்படுத்தி வருகின்றனர்.

"பயப்படத் தேவையில்லை"
இந்நிலையில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் க்ரிஸ் முர்ரே, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "2023-ம் ஆண்டு கோடிக்கணக்கான ஓமிக்ரான் வைரஸ் தொற்று மக்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், நன்றாக புரிந்துகொள்ளுங்கள். அவை ஓமிக்ரான் தொற்றாகவே இருக்கும். உருமாறிய கொரோனா வைரஸாக இருக்கிறது. சீனாவில் தற்போது பரவி வருவதும் ஓமிக்ரானின் ஒரு வகைதான். எனவே, யாரும் இதுகுறித்து அச்சமடைய தேவையில்லை.

"உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது"
சீனாவில் தற்போது பரவி ஓமிக்ரான் வைரஸ் என்பதால்தான் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும். ஆனால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக, கடந்த ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டது. ஆனால், அது வேறு நாடுகளுக்கு பரவில்லை. கட்டுப்படுத்தப்பட்டும் விட்டது. அதே சமயத்தில், ஓமிக்ரான் மனிதர்களுக்கு வேகமாக பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்தது" என க்ரிஸ் முர்ரே கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications