படிக்க சொல்லி 'டார்ச்சராம்'.. டீச்சரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்.. கொடுமை
வாஷிங்டன்: தினமும் படிக்க சொல்லி டார்ச்சர் செய்ததால் ஆத்திரமடைந்த 6 வயது சிறுவன் தனது கணக்கு ஆசிரியையை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இதயம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குண்டு பாய்ந்த நிலையில், ஆசிரியை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுட்ட சிறுவனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவனது பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிக கெடுபிடி
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள நியூஸ்போர்ட் நியூஸ் நகரில் செயல்பட்டு வருகிறது ரிச்னக் தொடக்கப்பள்ளி. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் முதல் கிரேடு (ஒன்றாம் வகுப்பு) வருகிறான். படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சிறுவனின் பெற்றோர், அடிக்கடி அவனது வகுப்பாசிரியர்களை பார்த்து, பையனை நன்றாக படிக்க வையுங்கள் எனக் கூறி வந்துள்ளனர். இதனால் ஆசிரியர்களும் அவன் மீது சற்று கூடுதல் கவனம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால், ஆசிரியர்களின் இந்தக் கெடுபிடி சிறுவனுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கணித ஆசிரியை மீது கோபம்
குறிப்பாக, அவனது கணித ஆசிரியை சிறுவன் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்து வந்தார். தினமும் அவனுக்கு கூடுதலாக ஹோம்ஒர்க் கொடுப்பது, ஹோம்ஒர்க் சரியாக செய்து வராவிட்டால், உடனடியாக அவனது பெற்றோருக்கு தெரிவிப்பது என அவரது கெடுபிடி அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆசிரியை மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளான் சிறுவன். இதை பற்றி அடிக்கடி தனது சக நண்பர்களிடமும் அந்த சிறுவன் தெரிவித்து வந்துள்ளனான்.

வெடித்த துப்பாக்கி
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல பள்ளி தொடங்கியது. முதல் வகுப்பே கணிதம் என்பதால் ஆசிரியை, பாடத்தை தொடங்கியுள்ளார். அப்போது அந்த சிறுவனை எழுப்பிய ஆசிரியை, "இது நேற்று நான் சொல்லித் தந்த கணக்குதான். இதை எப்படி செய்ய வேண்டும் எனக் கூறு" என்று கேட்டிருக்கிறார். அப்போது தனது தோள் பையில் இருந்து கைத் துப்பாக்கியை எடுத்த அந்த சிறுவன், ஆசிரியையை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் ஆசிரியைக்கு இதயம், வயிறு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்தது. இதில் ஆசிரியை அப்படியே ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

ஆசிரியை கவலைக்கிடம்
துப்பாக்கி சத்தத்தை கேட்டு அங்கு வந்த மற்ற ஆசிரியர்கள், சிறுவனை லாவகமாக மடக்கிப் பிடித்தனர். பின்னர் மயங்கிக் கிடந்த ஆசிரியையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிரியை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே, இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு வந்த சம்பந்தப்பட்ட சிறுவன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான், மேற்கூறிய தகவல்களை சிறுவன் கூறியுள்ளான். மேலும், அவன் பயன்படுத்தியது அவனது தந்தையின் துப்பாக்கி ஆகும். இதையடுத்து, அவனது பெற்றோரிடமும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

அமெரிக்காவை அலற வைக்கும் துப்பாக்கி சத்தம்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது சமீபகாலமாக சர்வசாதாரணமாக மாறிவிட்டது. அதுவும் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கி வன்முறை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் டெக்சாஸில் உள்ள பள்ளியில் சைக்கோ நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கிப் போட்டது. 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் துப்பாக்கியை வாங்கலாம் என்ற அந்நாட்டு சட்டமே இந்த சம்பவங்களுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 44 ஆயிரம் பேர் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.
-
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவுக்கு 7 பெரும் சவால்கள்! அபாய மணியடிக்கும் வளைகுடா -
’வா சினிமாவுக்கு போலாம்’ வாட்ஸ் அப்பில் தொல்லை கொடுத்த ஆசிரியை! பள்ளி மாணவன் செய்த அல்டிமேட் சம்பவம் -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications