எல்லாம் "அந்த" விஷயத்திற்கு தானாம்! டி-ரெக்ஸ் டைனோசரின் சிறிய முன்கை!. பாட்னரை தாங்கவும் உதவுமாம்
வாஷிங்டன்: டி-ரெக்ஸ் டைனோசர் வகைகள் சிறிய முன்கைகளைக் கொண்டு இருக்கலாம் என்பதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகை டைனோசர்கள் தான் ஆக்கிரமித்து இருந்தது. மிகச் சிறிய டைனோசர் தொடங்கிப் பல டன் எடை கொண்ட டைனோசர் வரை பல வகைகள் இருந்தன.
இவை பூமி முழுக்க பல்வேறு கண்டங்களிலும் வாழ்ந்து வந்த டைனோசர்கள், சில காரணங்களால் உலகை விட்டு முழுவதுமாக அழிந்தே போய்விட்டன.

டைனோசர்
டைனோசர்கள் அழிந்து பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டாலும் கூட, டைனோசர்கள் குறித்து அறிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. குறிப்பாக உலகெங்கும் பல பகுதிகளில் இருந்து டைனோசர்களின் புதைபடிவங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. அப்படித் தான், சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதைப்படிவம் அர்ஜெண்டினாவின் படகோனியா பிராந்தியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புதைப்படிவம்
இது நான்கு டன் எடையும் சுமார் 36 அடி நீளமும் கொண்டதாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த டைனாசார் வகை டி-ரெக்ஸ் எனப்படும் திரனோசொரஸ் ரெக்ஸுடன் சில உடல் பண்புகளைப் பகிர்ந்து கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக டிரெக்ஸுக்கு இருப்பதைப் போலவே மிகப்பெரிய தலை மற்றும் சிறிய முன் கைகள் இதற்கும் உள்ளன.

மெராக்ஸ்
அதற்காக இந்த வகையும் டி-ரெக்ஸுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறிவிட முடியாது. இது முற்றிலும் மாறுபட்ட டைனோசர்கள் குழுவைச் சேர்ந்தது. இது வகை டைனாசர்களை carcharodontosaurids அல்லது மெராக்ஸ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வகை டைனோசர்கள் டி-ரெக்ஸ் வாழ்வதற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய முன்கைகள்
எனவே இது சிறிய கைகள் முன்பு நினைத்ததை விட அதிக பரிணாம நன்மைகளைப் பெற்றிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அர்ஜெண்டினாவில் உள்ள ரியோ நீக்ரோ தேசிய பல்கலைக்கழகத்தின் நிபுணர் ஜுவான் கனேல் கூறுகையில், "சிறிய கைகள் சும்மா இருந்து இருக்காது. கண்டிப்பாக அதற்கு எனத் தனியாக ஒரு செயல்பாடு அல்லது வேலை இருந்து இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்சேர்க்கை
குறிப்பாக இனச்சேர்க்கை சமயத்தில் இது உதவி இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். இனச்சேர்க்கை சமயத்தில் பெண் டைனோசரை பிடிக்க இந்த சிறு கைகள் உதவி இருக்கலாம். அல்லது இனச்சேர்க்கை சமயத்தில் பாட்னருக்கு பின்னால் இருக்கும் போது, விழாமல் பேலன்ஸ் செய்யவும் கூட இந்த சிறு கைகள் உதவி இருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

டிரெக்ஸ்
அதாவது மெராக்ஸ் மற்றும் டி-ரெக்ஸ் டைனோசர்களுக்கும் தொடர்பு இல்லை. இருப்பினும், இரு வகை டைனோசர்களுக்கும் சிறு கைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இரு வகைகளுக்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட டி-ரெக்ஸ் டைனோசர்களுக்கும் கூட இனச்சேர்க்கைக்காகவே சிறு கைகள் அமைந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

முக்கியம்
இந்த மெராக்ஸ் புதைப்படிவம் முதலில் கடந்த 2012ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டது. 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் வாழ்ந்த இந்த வகை டைனோசர், சுமார் 45 வயதில் உயிரிழந்தது. அதன் முன்கைகள் அதன் தொடை எலும்பின் நீளத்தில் 47 சதவீதம் மட்டுமே இருந்தது. இந்த டைனோசர் குறித்த ஆய்வுக் கட்டுரை தான் இப்போது வெளியாகி உள்ளது. இந்த புதைப்படிவம் சைனோர் குறித்த பல தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுவதாதாக கூறப்படுகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications