வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவ்ளோ கிட்டயா!.. விட்டா மோதிவிடும் போல.. 10 அடி உயரத்தில் பறந்த விமானம்.. வெலவெலத்து போன மக்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கிரீஸ் நாட்டில் ஏஜியன் கடலுக்கு வடமேற்கில் உள்ள ஸ்கியாதோஸ் தீவில் சுற்றுலாப்பயணிகளின் தலையை உரசுவது போல் பறக்கும் விமானத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

வானத்தில் பல அடி உயரத்தில் செல்லும் விமானங்களை இன்னமும் அன்னாந்து மேல் நோக்கி பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

வானில் காற்றை கிழித்துக்கொண்டு சீறும் விமானாங்களை தரையில் இருந்து பார்த்தால் சிறிய பறவை பறப்பது போல் தான் இருக்கும்.

ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண்.. சித்ரவதை சிறையில் அடைப்பு.. ஈரானில் தொடரும் கொடூரம்-பதற்றம் ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண்.. சித்ரவதை சிறையில் அடைப்பு.. ஈரானில் தொடரும் கொடூரம்-பதற்றம்

உயரத்தில் பறக்கும் விமானம்

உயரத்தில் பறக்கும் விமானம்

கிராமப்புறங்களில் இப்படியென்றால் நகரவாசிகள் விமானம், அதன் நிலையத்தில் தரையிறங்கும் போதும் டேக் ஆஃப் ஆகும் போது அதன் பிரம்மாண்டத்தையும் விமானம் சீறிப்பாயும் வேகத்தையும் ரசித்து இருப்பர். இதையெல்லாம் விமானத்தில் அவ்வளவாக பயணிக்காதவர்களுக்கானது. விமானத்தில் பயணித்தவர்களுக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரியம் அளிக்காதுதான்..

தலையை உரசும்படி பறந்தது

தலையை உரசும்படி பறந்தது

வானத்தில் அவ்வளவு உயரத்தில் பறக்கும் விமானம் நாம் தொட்டு விடும் உயரத்தில் பறப்பதை பார்த்தால் எப்படி இருக்கும். படிக்கும் போதே என்னவென்று புருவத்தை உயர்த்த தோன்றுகிறதா... ஆனால் உண்மையிலேயே ஒரு விமானம் நாம் தொட்டு விடும் உயரத்தில் பறந்தது.. ஆம் இது பொய்யல்ல.. உண்மைதான். கிரீஸ் நாட்டில் ஏஜியன் கடலுக்கு வடமேற்கில் உள்ள ஸ்கியாதோஸ் தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போதுதான் இப்படி நமது தலையை உரசும்படி விமானம் தாழ்வாக பறக்குமாம்.

குனிந்து வழிவிட்ட பயணிகள்

குனிந்து வழிவிட்ட பயணிகள்

சுற்றுலாப்பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலான ஒரு வீடியோதான் தற்போது டிரெண்டிங் ஆகிறது. இந்த வீடியோவில், தீவு ஒன்றில் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகை கேமராக்களில் பதிவு செய்து கொண்டும் வியந்தும் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். அப்போது சர்ரென்று வரும் விமானம் அங்கிருந்தவர்களின் தலையை பதம் பார்ப்பது போல வருகிறது. உடனே உஷாரான சுற்றுலாப்பயணிகள் குனிந்து வழிவிட்டு மெய்சிலிர்த்தபடி ரசிக்கின்றனர்.

கிரீஸ் நாட்டின் இயற்கை வளம்

கிரீஸ் நாட்டின் இயற்கை வளம்

ஸ்கியாதோஸ் தீவில் விமானம் இப்படி தாழ்வாக பறப்பது ஒன்றும் புதிது கிடையாதாம். இதற்கு முன்னர் பலமுறை இப்படி சென்றுள்ளது என்றாலும் இவ்வளவு தாழ்வாக பறந்தது இப்போதுதான் என்கிறார்கள். தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு கிரீஸ். ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாடு சுற்றுலாவுக்கு பெயர் போனதாகும். அழகிய கடற்கரைகள், இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள் என கிரீஸ் நாட்டின் வளத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம். இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இடங்களில் ஒன்றாக கிரீசும் உள்ளது.

English summary
A mesmerizing video of a flying plane purporting to rub the heads of tourists on the island of Skiathos in the northwestern Aegean Sea in Greece is going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X