வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நெருங்கும் நிலையில் பரபரப்பு.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலானியாவுக்கு கொரோனா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்ததையடுத்து, ட்ரம்ப், அவரது மனைவி மெலானியாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர்கள் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதை ட்ரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் இருவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சீனாவில் புகழ் பெற்ற தீம் பார்க்கில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் பலி சீனாவில் புகழ் பெற்ற தீம் பார்க்கில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் பலி

தனிமை

தனிமை

''தேர்தலுக்கு ஹோப் ஹிக்ஸ் கடுமையாக ஓய்வு இல்லாமல் உழைத்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நானும், எனது மனைவியும் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். அதுவரை நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்'' என்று வியாழக் கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டரில் ட்ரம்ப் பதிவிட்டு இருந்தார்.

மாஸ்க்

மாஸ்க்

தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டு இருந்தபோது, அவருடன் முக்கிய உதவியாளர்கள் சென்று இருந்தனர். கடந்த செவ்வாய் கிழமை டிவி விவாத நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்து கொண்டு இருந்தபோதும், அவருடன் ஹிக்ஸ் சென்று இருந்தார். இவர் மட்டுமின்றி மற்ற சில முக்கிய உதவியாளர்களும் ட்ரம்ப்புடன் சென்று இருந்தனர். மின்னசோட்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்வதற்கு சென்று இருந்த ட்ரம்ப்புடன் சென்ற உதவியாளர்கள் யாருமே மாஸ்க் அணியவில்லை என்று கூறப்படுகிறது.

பரிசோதனை

பரிசோதனை

ஆனால், ஹிக்ஸ் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து இருந்தார். அவர் மாஸ்க் அணிந்து இருந்தபோதும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நான் பரிசோதனை செய்து கொண்டேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.

பிரச்சாரம்

பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருந்த ட்ரம்ப்புக்கு தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் எப்படியும் அவர் குறைந்தது வீட்டை விட்டு வெளியே வருவதற்கு 22 நாட்களுக்கு மேல் ஆகும். அதற்குள் தேர்தலும் நெருங்கி வருகிறது. இது மிகப் பெரியா இக்கட்டான சூழலை ட்ரம்ப்புக்கு ஏற்படுத்தி இருக்கிறது. அவரது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Trump and his wife Melania quarantine after tests positive for Covid-19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X