மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்த ஈரான்! வழிக்கு வந்த அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானை காலி செய்ய டிரம்ப் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பேக் ஃபயராக மாறியிருக்கிறது. இந்நிலையில் வேறு வழியே இல்லாமல், ஈரானின் எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்க டிரம்ப் அனுமதித்திருக்கிறார்.

இப்படி செய்திருப்பது நிச்சயம் ஈரானுக்குதான் பாசிடிவாக மாறும். ஆனால், அப்படியெல்லாம் நடக்க விட மாட்டோம் என்று டிரம்ப் சமாதானம் சொல்லியிருக்கிறார்.

Trump Eases Iranian Oil Sanctions

ஈரானின் முக்கிய ஆயுதம்

போருக்கு வந்த அமெரிக்காவை, நேருக்கு நேர் நின்று சண்டை செய்தால் நிச்சயம் ஈரான் தோற்றுவிடும். அமெரிக்காவின் பலம் உலகம் அறிந்தது. எனவே, போரின் போக்கை மாற்ற கச்சா எண்ணெயில் கை வைத்தது ஈரான். கச்சா எண்ணெய்தான் ஈரானின் ஆயுதம். அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் கிடங்குகளையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் ஈரான் கொடூரமாக தாக்கியிருக்கிறது. இதன் பாதிப்பு அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்.

ஈரான் எதிர்பார்த்தபடி, சர்வதேச எண்ணெய் விநியோக சங்கிலி உடைந்தது. இதனால் மொத்த நாடுகளின் கோபம் அமெரிக்கா பக்கம் திரும்பியிருக்கிறது. எனவே, டிரம்புக்கு 2 வழிகள்தான் இருக்கின்றன.

1.எண்ணெய் வர்த்தகத்தை இயல்பாக்குவது
2.ஈரானை முழுமையாக அழிப்பது

சரணடைந்த டிரம்ப்

இரண்டாவது மேட்டர் ரொம்ப டேஞ்சர். எடுத்தோம், கவுத்தோம் என்று செய்துவிட முடியாது. நின்று பொறுமையாக விளையாடிதான் ஜெயிக்க முடியும். எனவே, முதல் விஷயத்தில் சரணடைந்திருக்கிறார் டிரம்ப். இதற்கு முன்னர் ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்திருந்தார் டிரம்ப். இப்போது திடீரென, இந்த தடைகளை நீக்கியிருக்கிறார். அதாவது ஏற்கெனவே பூமிக்கடியில் இருந்து எடுக்கப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டிருக்கும் எண்ணெய்யை மட்டும் ஈரான் விற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

காரணம் இதுதான்

இதற்கு காரணம் அமெரிக்கா உட்பட, மேற்கு நாடுகள் பல கடுமையான எரிபொருள் விலையை சந்தித்து வருகிறது என்பதுதான். உலகம் முழுவதும் 2 வழிகளில் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும். ஒன்று ஹார்முஸ் நீரிணை. இந்த வழியாக 30% கச்சா எண்ணெய் கப்பல்கள் பயணிக்கின்றன. ஆனால், ஈரான் கடந்த 2 வாரங்களாக இந்த பாதையை முடக்கியிருக்கிறது. அதேபோல செங்கடல் சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் போகும். அதுவும் போர் காரணமாக தடை பட்டிருக்கிறது.

அமெரிக்க தலையில் விழுந்த இடி

எனவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த போர் தொடங்குவதற்கு முன்னர், அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.64க்கு விற்கப்பட்டிருந்தது. தற்போது இதன் விலை ரூ.86 ஆக அதிகரித்திருக்கிறது. எனவே மக்கள் டென்ஷனில் இருக்கின்றனர். இதுதவிர, இந்த ஆண்டு அமெரிக்காவில் இடைத்தேர்தல் வருகிறது. எனவே, நிலைமையை சமாளிக்கவே ஈரான் எண்ணெய்யை விற்க தற்காலிக அனுமதியை கொடுத்திருக்கிறார் டிரம்ப்.

சொதப்பல் பிளான்

டிரம்ப் தரப்பில் பார்த்தால், பெட்ரோல் விலை ஏற்றத்தை சமாளிக்க இது சரியான நடவடிக்கை போல தெரியும். ஆனால், சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இதை விமர்சித்திருக்கின்றனர். ஏனெனில், ஈரானின் எண்ணெய், சுமார் 140 மில்லியன் பேரல் விற்பனைக்கு வர இருக்கிறது. இது மொத்த உலகத்திற்கும் ஒன்றரை நாள் தேவைக்குதான் சரியாக இருக்கும். அப்படியெனில், எப்படி பெட்ரோல் விலை குறையும்? என்று கேள்வி எழுகிறது.

மொத்தத்தில் இந்த போரின் போக்கை, ஈரான்தான் முடிவு செய்து வருகிறது என்பது, டிரம்பின் இந்த அறிவிப்பில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+