வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜார்ஜியா தேர்தல் முடிவுகளை மாற்றாவிட்டால் கடும் விளைவுகள்.. அதிகாரியை டிரம்ப் மிரட்டிய ஆடியோ வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடனை விட ஒரு வாக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்றும் அதற்கேற்ப தேர்தல் முடிவுகளை மாற்றுமாறும் மாகாண தேர்தல் அதிகாரியை அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய ஆடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடனும் போட்டியிட்டார்கள்.

இதன் தேர்தல் முடிவுகள் ஜோ பிடன் வெற்றி பெற்றதாகவே வந்தன. எனினும் இதை ஏற்க டிரம்ப் மறுத்து வந்தார். தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றமோ இவரது வழக்கை தள்ளுபடி செய்தது.

46 ஆவது அதிபர்

46 ஆவது அதிபர்

ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுக் கொள்கிறார். இந்த நிலையில் தேர்த்ல முடிவு தொடர்பாக டிரம்ப் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜார்ஜியா மாகாண தேர்தல் அதிகாரியான பிராட் ராபென்ஸ் பெர்கரை டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

ஜார்ஜியா

ஜார்ஜியா

இதுதொடர்பாக ஆடியோ வெளியானது. அதில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே 11779 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே இந்த மாகாண ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும். அவ்வாறு எண்ணும் போது 11780 வாக்குகளை குடியரசுக் கட்சி பெற்றிருப்பதாக கூற வேண்டும். மிகவும் அதிகமில்லை ஒரே ஒரு வாக்குதான் கூடுதலாக அறிவிக்க வேண்டும் என்றார் டிரம்ப்.

டிரம்பின் கோரிக்கை

டிரம்பின் கோரிக்கை

இது போல் தொடர்ந்து அந்த அதிகாரியை அவர் மிரட்டியுள்ளார். மேலும் இதற்கு உடன்பட்டால் விளைவுகள் பெரிதாக இருக்கும் என டிரம்ப் மிரட்டிய ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல்கள் விடுத்த போதிலும் பிராட் டிரம்பின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அப்போது டிரம்பிடன் பிராட் கூறுகையில் உங்களிடம் உள்ள சவால், உங்களிடம் உள்ள தகவல்கள் தவறானது. உங்களிடம் தகவல்களை சமர்ப்பிக்கும் நபர்கள் இருக்கிறார்கள் அதேபோல் தகவல்களை சமர்ப்பிக்கும் மக்கள் எங்களிடம் உள்ளனர் என்றார்.

சரிபார்க்கும்

சரிபார்க்கும்

இந்த ஆடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றம் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடவுள்ள நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. ஜார்ஜியாவில் ஜோ பிடன் 74 தேர்தல் சபை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

English summary
Trump pressurises Georgia electoral officer to do malpractice in vote counting. Audio releases goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X