வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவி காலம் முடிவதற்குள்... அணு ஆயுத தாக்குதல் நடத்த டிரம்ப் திட்டமா? அதிர்ச்சி தகவல்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டிரம்ப் தனது பதவி காலம் முடிவதற்குள் ஆணு ஆயுதங்களை ஏவும் சங்கேத குறியீடுகளை பயன்படுத்த கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக முப்படை ராணுவ தளபதியை தொடர்பு கொண்டு பேசிய சபாநாயகர் நான்சி பெலோசி, அணு ஆயுத தாக்குதல் நடத்தும் முடிவை டிரம்ப் மேற்கொள்வதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Trumps Power To Launch Nuclear Strike Raises Concerns

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். ஆனால் டொனால்ட் டிரம்ப் ,இந்த வெற்றியை ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம்சாட்டி அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்ட வழக்குகள் கோர்ட்டுகளில் செல்லுபடியாகவில்லை.

ஜோ பிடன் தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடந்த வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிடனின் வெற்றியை ஏற்க முடியாத டிரம்ப் பதவி காலம் முடிவதற்குள் மோசமான சில முடிவுகளை மேற்கொள்ள உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றன. அதாவது தற்போதைய டிரம்ப் தனது பதவி காலம் முடிவதற்குள் ஆணு ஆயுதங்களை ஏவும் சங்கேத குறியீடுகளை பயன்படுத்த கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வந்துளளது.

டிரம்ப் தனது பதவி காலம் முடிவதற்குள் ஆணு ஆயுதங்களை ஏவும் சங்கேத குறியீடுகளை பயன்படுத்த கூடும் என்பதால் பென்டகன் அதிகாரிகள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி உஷார்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக முப்படை ராணுவ தளபதி மார்க் மில்லியை தொடர்பு கொண்டு பேசிய நான்சி பெலோசி, அணு ஆயுத தாக்குதல் நடத்தும் முடிவை டிரம்ப் மேற்கொள்வதற்கு முன்பு அதனை அவர் பயன்படுத்தாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நான்சி பெலோசி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஆணு ஆயுத தாக்குதல் திட்டங்கள் குறித்து உத்தரவிட முடிவு செய்தால், அவர் ராணுவ தளபதியை அணுகி செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shocking reports have surfaced that Trump may use code to launch male weapons by the end of his term
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X