கொரோனா சிகிச்சைக்கு இடையே காரில் வலம் வந்த ட்ரம்ப் - ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
வாஷிங்டன்: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிகிச்சைக்கு இடையே மருத்துவமனையை விட்டு வெளியே வந்து தனது காரில் அமர்ந்தபடியே ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தார். திடீரென ட்ரம்பை பார்த்த ஆதரவாளர்கள் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டுமே 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முக கவசம் போடுவதை கூட கிண்டலாக பேசினார். முக கவசம் அணிவதையும் தவிர்த்து வந்த அவர் தற்போது முக கவசத்துடனேயே வலம் வருகிறார் காரணம் அவரையும் கொரோனா பாசமாக பற்றிக்கொண்டது. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருந்த ட்ரம்ப் தற்போது ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டிரம்ப் சிகிச்சை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வல்லுநர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
— Donald J. Trump (@realDonaldTrump) October 4, 2020 |
ட்ரம்ப் உடல் நிலை எப்படி
ட்ரம்புக்கு தற்போது 74 வயதாகிறது. பொதுவாகவே, கொரோனா வயது முதிர்ந்தவர்களை கடுமையாக தாக்கி வருகிறது. ஆனால், ட்ரம்பின் உடல்நிலையில் பிரச்சினையில்லை எனவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாறி மாறி ஆளுக்கு ஒரு தகவல் கூறுவதால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

என்ன மருந்து
ட்ரம்புக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று டொனால்ட் ட்ரம்ப் நேரடியாக வெளியிட்டிருந்த வீடியோவில், தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்பிவிட நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் அளவு
அதிகாரிகள் தெரிவித்ததற்கு மாறாக ட்ரம்பின் உடல்நிலை மோசமடைந்ததாக வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊழியர் தலைவர் மார்க் மிடோஸ் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ட்ரம்புக்கு காய்ச்சல் வந்து ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கணிசமாக குறைந்தபிறகே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.

உடல் நிலையில் முன்னேற்றம்
மார்க் மிடோஸ் பேசியபோது, தற்போது மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் அவருக்கு காய்ச்சல் இல்லை. மேலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு நன்றாக இருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு அவரது நிலை மோசமாக இருந்தது வருத்தமளித்தது. காய்ச்சல் இருந்தது. மேலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. ஆனாலும் அவர் தனது பாணியில் வலம் வந்துகொண்டு இருந்தார். நேற்று காலை நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ட்ரம்ப் உடல்நிலையில் நம்பமுடியாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
மருத்துவர்களும், வெள்ளை மாளிகை அதிகாரிகளும் மாறி மாறி முரண்பாடான தகவல்களை கூறியதால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் குழப்பமடைந்தனர். ட்ரம்ப் சிகிச்சை பெறும் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது திடீரென அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் காரில் வலம் வந்தார் ட்ரம்ப். ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்தார். அங்கு கூடியிருந்த ட்ரம்ப் ஆதரவாளர்களும் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொரோனா சிகிச்சைக்கு இடையே ட்ரம்ப் வெளியே வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications