வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப் வெளியிட்ட அடுத்தடுத்த ட்வீட்.. எச்சரித்து மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்திய ட்விட்டர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தவறான தகவல்களை ட்ரம்பின் ட்வீட்டரில் பதிவிட்டதாக ட்விட்டர் மீண்டும் அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறது, அமெரிக்காவில் தேர்தல் தினத்திற்குப் பிறகு பெறப்பட்ட வாக்குகள் கணக்கிடப்படாது என்று டிரம்ப் கூறியதற்காக இப்படி செய்துள்ளது ட்விட்டர்

சமீபத்திய நாட்களில் டிரம்ப் அனுப்பிய பல ட்வீட்களுக்கு ட்விட்டர் நிறுவனம் சர்ச்சைக்குரிய ட்வீட், தவறாக வழிநடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் இன்று டிரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

Twitter flags Trump election tweet as disputed and possibly misleading

அமெரிக்காவில் தேர்தல் நாளில் வாக்களிப்பு முடிந்தபின், மாகாணங்களில் ஒருசில நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட வாக்குகளை எண்ணுவது இயல்பு ஆகும். இந்த சூழலில் டிரம்ப் தோல்வி முகம் தெரிந்த காரணத்தால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்வீட் போட்டார். இப்படி வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் நாளுக்குப் பிறகு எந்த வாக்குகளும் கணக்கிடப்படாது என்று கூறினார்.

இதை சர்ச்சைக்குரிய மற்றும் தவறாக வழிநடத்தக்கூடும் என்று லேபிள் போட்டு ட்விட்டர் அசிங்கப்படுத்தி உள்ளது. இதேபோல் இன்னொரு ட்விட்டில் ஏமாற்றுவதை நிறுத்துங்கள் என்றும் இதையும் தவறாக வழிநடத்தும் ட்வீட் என்று அடையாளப்படுத்தி உள்ளது

வெறும் ஒரு பாய்ண்ட்.. மொத்தமாக மாறப்போகும் முடிவு.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் டுவிட்வெறும் ஒரு பாய்ண்ட்.. மொத்தமாக மாறப்போகும் முடிவு.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் டுவிட்

தற்போதைய நிலையல் ஜோ பிடன் 264 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்து உள்ளார்.இந்த சூழலில் ட்ரம்ப் தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, வாக்களிப்பதை நிறுத்த முயற்சிக்க நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க முயற்சிக்கும் விதமாக வாக்காளர்கள் இதுவரை இல்லாத அளவுக்க அனுப்பிய வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக எண்ணப்படுகிறது. 270 வாக்குகளை பெறுவோர் அதிபர் ஆக முடியும் என்கிற நிலையில் , பிடன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாத டிரம்ப் கடுமையாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

English summary
Twitter Inc on Thursday flagged as disputed and possibly misleading a post by President Donald Trump that said votes received after Election Day in the United States would not be counted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X