வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயங்கரவாத குழுக்களும் பாகிஸ்தானும்.. ரொம்பவே கண்காணிக்கிறோம்..பிரதமர் மோடியிடம் கமலா ஹாரிஸ்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன; இந்த குழுக்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுவதாக பிரதமர் மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.

குவாட் உச்சி மாநாட்டுக்காக அமெரிக்காவுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது அடோப் உட்பட உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் பிரதமர் மோடி. இச்சந்திப்புக்கு முன்னதாக கூட்டறிக்கை ஒன்றையும் இருவரும் வெளியிட்டனர்.

மூக்கு, காதில் விஷத்தை ஊற்றி.. கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை.. 13 பேர் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்புமூக்கு, காதில் விஷத்தை ஊற்றி.. கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை.. 13 பேர் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு

பேசியது என்ன?

பேசியது என்ன?

கமலா ஹாரிஸுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறியதாவது; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்

பாகிஸ்தானும் பயங்கரவாதமும்

அப்போது கமலா ஹாரிஸ் தாமாகவே முன்வந்து பயங்கரவாத குழுக்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடியிடம் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்தியா, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் வராது எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Recommended Video

    Modi US Visit | மோடியின் Boeing 777-க்கு Pakistan அனுமதி | Oneindia Tamil
    கண்காணிப்பு வளையத்தில் பாக்.

    கண்காணிப்பு வளையத்தில் பாக்.

    பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா பல பத்தாண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதையும் பயங்கரவாத சக்திகளுக்கு பாகிஸ்தான் உதவி வருவதை நெருக்கமாக அமெரிக்கா கண்காணித்து வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் உலகம் முழுவதுமே ஜனநாயகவாதிகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றனர். நமது நாடுகளின் ஜனநாயக அமைப்புகளின் விழுமியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார். இவ்வாறு ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா கூறினார்.

    குவாட் உச்சி மாநாடு

    குவாட் உச்சி மாநாடு

    குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபிடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் அதிபரான பின்னர் ஜோ பிடனை பிரதமர் மோடி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    US Vice President Kamala Harris told PM Modi that US closely monitor Pakistan’s support for terrorist groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X