அமெரிக்காவில் ஆட்டத்தை தொடங்கிய டெல்டா கொரோனா.. தினசரி பாதிப்பு 21% அதிகரிப்பு.. சமாளிக்க என்ன வழி
வாஷிங்டன்: இந்தியாவில் மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா தற்போது அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவ தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,
உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. கொரோனா அலை அலையாகத் தாக்குவதால் வைரஸ் பாதிப்பை எந்த நாட்டிலும் முழுவதுமாக கட்டுப்படுத்த முடிவதில்லை.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி டெல்டா வகை கொரோனா இப்போது உலக நாடுகளிலும் பரவி வருகிறது.

அமெரிக்கா கொரோனா
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 13,859ஆக உள்ளது. இது முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் 21% அதிகமாகும். உலகிலேயே அதிக தடுப்பூசிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ள போதிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேக்சின் பணிகளின் வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

டெல்டா கொரோனா
அமெரிக்காவில் தற்போது உறுதி செய்யப்படும் கொரோனா கேஸ்களில் சுமார் 52% டெல்டா கொரோனாவாக உள்ளது. இதற்கு முன்பு வரை பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவே ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக இருந்தது. இப்போது அங்கு ஆல்பா கொரோனா கேஸ்கள் 28.7% ஆகக் குறைந்துள்ளது.

கவலைக்குரிய கொரோனா
உலகில் தற்போது வரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கடந்த வாரம் டெல்டா கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாக அமெரிக்கா பட்டியலிட்டிருந்தது. மேலும், டெல்டா கொரோனா இளைஞர்களை அதிகம் தாக்கும் என்பது முக்கிய தலைவலியாக உள்ளது.

வேக்சின்கள்
அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் டெல்டா கொரோனா தான் தற்போது அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது டெல்டா கொரோனா தான் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேக்சின் தடுப்பாற்றல் டெல்டா கொரோனாவுக்கு எதிரா குறைவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கொரோனா உயிரிழப்புகளைத் தடுப்பூசிகள் குறைப்பதால் அனைவரும் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications