இந்தியாவுக்கே திரும்பி போயிடுங்க.. இல்ல நடப்பதே வேற.. தமிழக வம்சாவழி அமெரிக்க எம்.பிக்கு மிரட்டல்
வாஷிங்டன்: இந்தியாவுக்கே திரும்பி போய்விடுங்கள் என்றும் இல்லாவிட்டால் கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சென்னையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க எம்.பி பிரமிளா ஜெயபாலுக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதிலும், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர் என்றே சொல்லாலாம்.
வெளிநாடுகளில் இருந்து செட்டில் ஆகும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டு நபர்கள் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு வருவதால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிகம் செட்டிலாகும் இனக்குழுக்களில் ஒன்றாக இந்தியர்கள் இருப்பதால், இந்தியர்கள் மீது அங்குள்ளவர்களுக்குக் கோபம் இருந்து கொண்டே தான் இருக்கும். இதனால், இந்தியர்களை குறிவைத்து வெறுப்புகளை காட்டி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில், சென்னையை பூர்வீகமாக கொண்ட பிரமிளா ஜெயபால் என்பவருக்கு மிரட்டல் வந்துள்ளது.

பிரமிளா ஜெயபால்
சென்னையை பூர்வீகமாக கொண்ட பிரமிளா ஜெயபால் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த 1982-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய அவர் கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல்முறையாக சியாட்டில் தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அமெரிக்காவில் சியாட்டில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் தற்போது அமெரிக்க நாடாளுமன்ற எம்பியாக உள்ளார்.

இழிவான கருத்துக்கள்
இந்த நிலையில், பிரமிளா ஜெயபாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் எனக்கூறியதோடு வெறுப்புணர்வு கருத்துக்களையும் இழிவான கருத்துக்களையும் பேசியிருக்கிறார். இது தொடர்பாக தனக்கு வந்த ஆடியோ மெசேஜ்களை பிரமிளா ஜெயபால் பகிர்ந்து உள்ளார். மொத்தம் ஐந்து ஆடியோ மெசேஜ்களை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும்
அதில் மிகவும் இழிவான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. மெசேஜில் பேசும் ஆண் ஒருவர், ''உங்களின் பூர்வீக நாடான இந்தியாவுக்கே நீங்கள் திரும்பிசெல்ல வேண்டும். இல்லையென்றால் மிகவும் கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுக்கிறர். தனது ட்விட் பதிவில் பிரமிளா ஜெயபால் இது குறித்து கூறுகையில், ''பொதுவாக அரசியல் பிரமுகர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை காட்டமாட்டர்கள்.

இதனாலயே பகிர்ந்தேன்
ஆனால் தற்போது பரவி வரும் புதிய வடிவ வன்முறையை ஏற்ற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே நான் இதை பகிர முடிவு செய்துள்ளேன். இந்த வன்முறைக்கு அடிகோலும் இனவெறியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு கோடைக்காலத்தின் துவக்கத்தில் சியாட்டில் நகரில் உள்ள பிரமிளா ஜெயபால் வீட்டின் முன்பாக துப்பாக்கியுடன் நடமாடிய பிரெட் போர்செல் என்ற நபரை போலீசாரால் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

"டர்ட்டி இந்து"
இதேபோல் கடந்த 1 ஆம் தேதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மற்றொரு இந்தியரை இன ரீதியாக பேசியிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதான தேஜிந்தர் சிங் என்பவர் கிருஷ்ணன் ஜெயராமன் என்பவரை "டர்ட்டி இந்து" அருவருப்பான நாய் என்று திட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே இது போன்று வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடட்தக்கது.












Click it and Unblock the Notifications