புலி வருது கதைதான்..ஈரான் விஷயம் குறித்து US சொன்ன மேட்டர்! பஞ்சாயத்து எப்போதான் முடியுமோ!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி விஷயத்தில் ஈரானுடன் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் வழக்கம் போல ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அமெரிக்கா சொல்வதை பார்த்தல்.. புலி வருது கதை போலத்தான் இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

US

சவுதி இளவரசர், துருக்கியின் அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த 3 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும்.. அது ஒப்பந்தத்தில் உள்ள மற்ற 2 நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும். இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து தற்போது அமெரிக்கா கூறியிருக்கும் கருத்துக்களும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி விஷயத்தில் ஈரானுடன் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், வர்த்தக கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன் ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை அமெரிக்கா நீக்கும் என்றும் கூறியிருக்கின்றனர்.

ஈரான் தரப்பில், அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் இது குறித்து கூறுகையில், "நாங்கள் எங்கள் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்தவில்லை. போரை நீட்டிக்கவும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் நாங்கள் பணிந்து போவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களுடைய இப்போதைய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளில்தான் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

அமெரிக்கா செய்வதை எல்லாம் பாருங்கள்.. எங்களின் பக்கத்து நாடுகளில் உள்ள ராணுவ தங்களை பயன்படுத்தி எங்களையே தொடர்ந்து குறி வைத்து வருகிறது. இந்த பதற்றம் குறைய வேண்டும் எனில், வழி ஒன்றுதான்.. எங்கள் மீதான அழுத்தம் குறைய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் எப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி? எப்போது அமைதி திரும்புவது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+