இனிமேதான் உண்மையான அச்சுறுத்தலே இருக்கு..ரஷ்யாவிடம் இருப்பது “ரசாயன ஆயுதங்கள்” எச்சரிக்கும் பைடன்.!
வாஷிங்டன் : இனிமேல் தான் உண்மையான அச்சுறுத்தல் இருக்கும் என தான் நினைப்பதாகவும், உக்ரைனுக்கு எதிரான போரில் இராசயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
Recommended Video
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்த ரஷ்யா தீடிரென போரை தொடங்கியது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் உக்ரைன் வான் பரப்பில் ரஷியப்படை விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாடும் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

உக்ரைன் போர்
உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை தங்க வைத்துள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக், குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை என ஐ.நா.வின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புகலிடம் அளித்துள்ளதாக கூறினார்.

ரஷ்யாவுக்கு பதிலடி
மேலை நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தொடர்ந்து ரஷ்ய படைகளுடன் போர் புரிந்து வரும் நிலையில், மூன்றாவது வாரத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. ரஷ்யப் படைகள் தற்போது உணவுப் பஞ்சத்தால் தவித்து வருவதாகவும் மேலும் அவர்களது வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரஷ்யப் படை வீரர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிர்ச்சி வீடியோ
இதனிடையே மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடர்சியாக ஏவுவதாக அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியுபோல் நகரத்தை நோக்கி நொடிக்கு ஒரு முறை இந்த குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தரையில் இருந்த புற்களும் பற்றி எரிந்தன. இவ்வகை ஆவியாக்கும் குண்டுகள் மற்ற குண்டுகளை விட ஆபத்தானவை என்று கூறும் விஞ்ஞானிகள், இந்தக் குண்டுகள் வெடிக்கும் போது, ஒரு பெரிய தீ பிளம்பை உருவாக்கிக சுற்றியுள்ள பகுதியில் ஆக்சிஜனை உறிஞ்சும் என கூறப்படுகிறது.

ஜோ பைடன் எச்சரிக்கை
இந்நிலையில் இனிமேல் தான் உண்மையான அச்சுறுத்தல் இருக்கும் என தான் நினைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பாவிற்கு புறப்பட்டபோது, "உக்ரைன் மீது ரஷியா இரசாயன ஆயுத தாக்குதலை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இது உண்மையான அச்சுறுத்தலாக அமையும்.இப்போது ஏற்பட்டுள்ள தளவாட சிக்கல்கள் மற்றும் உக்ரேனிய படைகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, ரஷியா இரசாயன அல்லது அணு ஆயுதங்களை அதன் படையெடுப்பு நிறுத்தங்களாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. நாளை நடைபெறும் பிற நாட்டு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி விரிவாக பேச உள்ளேன்" என்றார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications