பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸின்.. சொத்து மதிப்பு எவ்வளவு! நாசா அவருக்கு தரும் சலுகைகள் என்ன
வாஷிங்டன்: சுமார் 9 மாதங்களாக விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் இப்போது பூமிக்கு திரும்புகிறார். அவர் நாளை காலை 3.30 மணியளவில் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த உலகமும் அவர்களின் வருகையைத் தான் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு எவ்வளவு.. அவரது சம்பளம் மற்றும் அவருக்குக் கிடைக்கும் சலுகைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எட்டு நாள் விண்வெளி பயணமாகக் கடந்த ஜூலை மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் சில காரணங்களால் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 9 மாதங்கள் அவர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலேயே இருக்க வேண்டி இருந்தது. நீண்ட தாமத்திற்குப் பிறகு அவர்கள் இப்போது தான் பூமிக்கு திரும்புகிறார்கள்.

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
உலகமே அவர்களின் வருகையைத் தான் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. நாசா அனுப்பிய ஸ்பேஸ் டிராகன் காப்ஸ்யூல் மூலம் அவர்கள் பூமிக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய நேரப்படி நாளை காலை 3.27 மணியளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு மற்றும் அவரது சம்பளம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் அமெரிக்காவின் பெடரல் அரசின் GS-15 சம்பள ரேங்கில் உள்ளனர். அமெரிக்க பெடரல் ஊழியர்களுக்குக் கிடைக்கும் அதிகபட்ச சம்பள ரேங்க் இதுவாகும். இதில் அவர்களுக்கு ஆண்டுக்கு அடிப்படை சம்பளமாக $125,133 முதல் $162,672 (இந்திய மதிப்பில் ரூ.1.08 கோடி முதல் ரூ.1.40 கோடி) கிடைக்கும்.
வருவாய்
நம் அனைவருக்கும் தெரியும் சுனிதா வில்லியம்ஸ் முதலில் 8 நாட்கள் பயணமாகவே விண்வெளி சென்றார். ஆனால், அது 9 மாதங்களாக மாறிவிட்டது என்று.. சர்வதேச விண்வெளி நிலையத்தில் அவர்கள் நீண்ட காலம் தங்கியிருப்பதால், இந்த ஒன்பது மாதங்களுக்கு அவர்களின் கூடுதல் அலவன்ஸ் கிடைக்கும். இந்த கூடுதல் அலவன்ஸ் $93,850 முதல் $122,004 (இந்திய மதிப்பில் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி) வரை இருக்கும்.
நிகர மதிப்பு
அடுத்து சுனிதா வில்லியம்ஸின் நெட் வொர்த் எனப்படும் நிகர மதிப்பைப் பார்க்கலாம். சுனிதாவும் அவரது கணவர் மார்ஷல் மைக்கேல் ஜே வில்லியம்ஸும் சேர்ந்து $5 மில்லியன் நிகர மதிப்பைக் கொண்டுள்ளதாக Marca தளம் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.43 கோடியாகும். அவர்களுக்கு டெக்சாஸில் சொந்தமாக வீடும் இருக்கிறது.
சலுகைகள்
இது மட்டுமின்றி விண்வெளி வீரர்களாக இருப்பதால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்களைப் போலவே, விண்வெளி வீரர்களுக்கும் ஹவுஸ் அலவன்ஸ் வழங்கப்படும். மேலும், சில நாசா ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கார் லோன் ஈஸியாக கிடைக்கும். குறைந்த வட்டியில் அவர்களுக்கு கார் லோன் கிடைக்கும். மேலும், உலகிலேயே அதிக ஆபத்தான வேலைகளில் ஒன்றை செய்வதால் சுனிதா வில்லியம்ஸ் போன்ற விண்வெளி வீரர்களுக்கு விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டமும் வழங்கப்படும்
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications