"ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு.." இவருக்கு 100 கோடி வருவாய்.. அதுவும் ஒவ்வொரு நாளும்.. அம்மாடியோவ்
வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு நாளைக்குச் சம்பாதிக்கும் பணத்தைக் கேட்டால் ஆடிப்போய்விடுவீர்கள். நாம் வாழ்க்கை முழுவதும் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா என்பது சந்தேகமே என நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.
நம் நாட்டில் திரைப்படங்களையும் பாடல்களையும் பிரிக்க முடியாது. இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்களுக்கு இங்கே பெரியளவில் புகழ், பணம் கிடைக்காது. இதன் காரணமாக ஹிப்ஹாப் தமிழா போன்ற இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட்களுக்கும் கூட திரைப்படங்களுக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆனால், அமெரிக்காவில் அப்படியில்லை. அங்கே திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் தொடர்பு இல்லை. இரண்டும் தனித்தனி துறைகளாகவே இயங்கி வருகிறது. குறிப்பாக அங்கே மியூசிக் துறை மிகவும் பெரியது,
அமெரிக்கா: அங்கு மியூசிக் துறை மட்டும் 84 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. பல நட்சத்திரங்களைக் கொண்ட துறையாக இது இருக்கிறது. அப்படி அங்கே இருக்கும் முக்கிய பாடகர்களில் ஒருவர் தான் டெய்லர் ஸ்விப்ட். ஒரு நாளைக்கு அவரது நிகழ்ச்சிக்கு விற்பனையாகும் டிக்கெட்களை பார்த்தால் நமக்குத் தலையே சுற்றிவிடும். நாம் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்தாலும் இவ்வளவு சம்பாதிக்க முடியாது போல என அமெரிக்கர்களே பலரே உச்சுகொட்டி வருகின்றனர்.
டெய்லர் ஸ்விப்ட்டின் சமீபத்திய இசை நிகழ்ச்சியில் 13 மில்லியன் டாலர் (சுமார் 100 கோடி ரூபாய்) மதிப்பிலான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தளவுக்கு டிக்கெட்கள் விற்பனையாவது இதுவே முதல்முறையாகும். இருப்பினும், இந்த முழு தொகையும் டெய்லருக்கு கிடைக்காது. இதில் பெரும்பாலான பணம் புரோடக்ஷன், மைதான வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கே செல்லும்.
இசை துறை: அதேநேரம் டீசர்ட், தொப்பி போன்ற merchandise விற்பனை இதில் சேர்க்கப்படவில்லை. அதையும் இதில் சேர்த்தால் வருமானம் எங்கேயோ சென்றுவிடும். சராசரியாக இந்த டூரில் அவரது பல இசை நிகழ்ச்சிகளில் வருவாய் 100 கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது Eras tour என்ற பெயரில் டெய்லர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், இதில் வருமானம் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த அவர் திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்க வரலாற்றில் அதிக வருமானத்தை கொண்ட இசை நிகழ்ச்சியாக இது மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.

33 வயதான டெய்லர் இப்போதும் மியூசிக் துறையில் உலகில் டாப் இடத்தில் ஒரு கலைஞராகவே இருக்கிறார். Eras tourஇல் கடந்தாண்டு முதல் டெய்லர் உலகெங்கும் 22 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள நிலையில், இதுவரை 300 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. இன்னும் 30 இசை நிகழ்ச்சிகளை அவர் நடத்த உள்ள நிலையில், ஒரு பில்லியன் டாலர் (ரூ. 8000 கோடி) வரை வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை எந்தவொரு இசைக் கலைஞரும் இந்த மைல்கல்லை எட்டியது இல்லை.
சராசரி டிக்கெட்: அதேபோல சராசரி டிக்கெட்களின் விலையும் டெய்லருக்கே அதிகமாக இருக்கிறது. இப்போது அவரது நிகழ்ச்சியில் விற்பனையாகும் சராசரி டிக்கெட்டின் விலை 254 டாலராக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் 20 ஆயிரமாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிகழ்ச்சியின் சராசரி டிக்கெட் விலை 119 டாலராகவே இருந்துள்ளது. 5 ஆண்டுகளில் அவரது நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை 134 டாலர்கள் வரை அதிகரித்துள்ளது.
5 ஆண்டுகளில் டிக்கெட் விலை இரட்டிப்பான போதிலும், அவரது நிகழ்ச்சிகளைப் பார்க்க வருவதை மக்கள் நிறுத்தவே இல்லை. இதன் காரணமாகவே இந்த டூரில் ஒரே நாள் நிகழ்ச்சிக்கே சுமார் 100 கோடி மதிப்பில் டிக்கெட் விற்பனையாகியுள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications