ஓரங்கட்டப்படும் பைடன்.. உள்ளே வரும் கமலா ஹாரிஸ்? டிரம்பை வீழ்த்த இதுவே ஒரு வழி.. ஆஹா மொத்தமாக மாறுதே
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து பைடன் விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஒரு வேலை பைடன் விலகினால், அவருக்குப் பதிலாகக் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அப்படி கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் அவரால் டிரம்பை வீழ்த்த முடியுமா என்பது குறித்த சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

அழுத்தம்: இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில், பைடன் இப்போது பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளார். அதாவது பைடன், டிரம்ப் இடையே நடந்த முதல் விவாதத்திற்குப் பிறகு பைடன் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. அவரது உடல்நிலை காரணமாக அதிபர் பதவியை பைடனால் திறம்படக் கையாள முடியாது எனப் பலரும் நினைக்கத் தொடக்கியுள்ளனர். இதனால் பைடன் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடக் கூடாது என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகவில்லை என்றால் ஜனநாயக கட்சிக்கு நிதி கொடுக்க மாட்டோம் என்று தொழிலதிபர்கள் செக் வைக்கவும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இப்போது வரை பைடனுக்கு அதிபர் தேர்தலில் இருந்து விலகும் ஐடியா இல்லை.. நிச்சயம் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டிரம்பை வீழ்த்துவேன் என்றே சொல்லி வருகிறார்.
கமலா ஹாரிஸ்: இது ஒரு பக்கம் இருக்க ஒரு வேளை அழுத்தம் அதிகரித்து பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகினால், அவருக்குப் பதிலாக இப்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னிறுத்தப்படுவார். அப்படி கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் அவரால் டிரம்பை வீழ்த்த முடியுமா என்பது குறித்த சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
59 வயதான கமலா ஹாரிஸ் இப்போது அமெரிக்கத் துணை அதிபராக இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையும் கமலா ஹாரிஸிடம் தான் இருக்கிறது. மேலும், துணை அதிபர் பதவிக்கு வந்த முதல் கறுப்பினத்தவரும் இவர் தான்.. முதல் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவரும் இவர்தான். எனவே, இவருக்கு கறுப்பினத்தவர் மத்தியில் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. பெண் வாக்காளர்கள் ஆதரவும் இவருக்கே அதிகம்.
சர்வே முடிவுகள்: சரி, பைடனுக்கு பதிலாகக் கமலா ஹாரீஸ் களமிறங்கினால் அவரால் டிரம்பை தோற்கடிக்க முடியுமா.. அங்கு சர்வே முடிவுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். கடந்த ஜூலை 2ம் தேதி வெளியான சிஎன்என் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை பைடன் vs டிரம்ப் எனப் போட்டி அமைந்தால் டிரம்பிற்கு 49% வாக்குகள் கிடைக்கும் என்றும் பைடனுக்கு 43% மட்டுமே வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கமலா ஹாரிஸ் vs டிரம்ப் என போட்டி அமைந்தால் டிரம்பிற்கு கிடைக்கும் வாக்குகள் 47% குறையும். கமலா ஹாரிஸுக்கு கிடைக்கும் வாக்குகள் 45%ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல எந்தக் கட்சியை சேராதவர்களின் ஆதரவும் 43-40% என்று கமலாஹாரிஸுக்கே டிரம்பை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. அதேபோல கடந்த வாரம் வெளியான ராய்ட்டர்ஸ்/ இப்சோஸ் கருத்துக் கணிப்பிலும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 42% பேரும், டிரம்பிற்கு ஆதரவாக 43% வாக்களித்தனர்.
கடும் போட்டி: அதாவது கமலா ஹாரிஸ் களத்திற்கு வந்தால் இப்போது டிரம்பை விட அதிக வாக்குகள் பெற முடியாது என்ற போதிலும் போட்டி கடுமையாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே பிகாயில் டிஸ்னி போன்ற ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக உள்ள தொழிலதிபர்கள் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவை அளிக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications