அமெரிக்காவே முடங்கும் அபாயம்! பைடனுக்கு மிக பெரிய பிரச்சினை.. மிட் டேர்ம் தேர்தல் பரபர முடிவுகள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அது அதிபர் பைடனுக்கு பெரிய பின்னடைவாகவே உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 2019 நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்..
அவர் இரண்டு ஆண்டுகளாக அதிபராக இருக்கும் நிலையில், இப்போது அங்கு மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. எப்போதும் அதிபர் தேர்தல் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த மிட் டேர்ம் தேர்தல் நடக்கும்.

அமெரிக்கா
எப்போதும் அதிபர் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறுவதால், இது ஆட்சியின் மீது மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது என்பதே பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதனால் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இணையாக இந்த மிட் டேர்ம் தேர்தலும் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் செனட் சபை மற்றும் பிரதிநிதிகளின் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன.

நாடாளுமன்றம்
100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 35 இடங்களுக்கு மிட் டேர்ம் தேர்தல் நடக்கும். 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே, இவர்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும்.

தேர்தல் முடிவுகள்
இந்த முறை பைடன் ஆட்சி மீதான அதிருப்தி, விலைவாசி உயர்வு, வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சி மிகப் பெரிய அளவில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. இருப்பினும், ஆளும் ஜனநாயக கட்சிக்கு அந்தளவுக்குத் தோல்வி கிடைக்கவில்லை. சொல்லப்போனால் செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டனர்.

குடியரசு கட்சி
இருப்பினும், பிரதிநிதிகளின் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. அங்கு மொத்தம் 435 இடங்கள் இருக்கும் நிலையில், குடியரசு கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான 218 இடங்களில் வென்றுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி 8 இடங்களை இழந்துள்ளது. இதனால் பிரதிநிதிகள் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி தங்கள் பெரும்பான்மையை இழந்துள்ளது.

சபாநாயகர் மாற்றம்
இப்போது அங்கு ஆளும் ஜனநாயக கட்சியின் நான்சி பெலோன்சி சபாநாயகராக உள்ளார். இப்போது பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்குப் பெரும்பான்மை உள்ள நிலையில், அவர்கள் சபாநாயகர் பொறுப்பிற்கு கெவின் மெக்கார்த்தியின் பெயரை முன்மொழிந்து உள்ளனர். சபாநாயகர் பொறுப்பு மட்டும் குடியரசு கட்சிக்குச் சென்றால், அது பைடனுக்கு பெரிய தலைவலியைத் தரும்.

என்ன நடக்கும்
அடுத்ததாக அமெரிக்காவில் புதிய சட்டத்தையும் கொண்டு வரப் பிரதிநிதிகளின் சபை, செனட் சபை மற்றும் அதிபரின் ஒப்புதல் தேவை. இப்போது எதிர்க்கட்சியினர் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றி உள்ள நிலையில், புதிய சட்டங்களைக் கொண்டு வர விடாமல் அவர்களால் முடக்க முடியும். ஒபாமா இரண்டாவது முறை அதிபராக இருந்த போதும், டிரம்ப் காலத்திலும் கூட இதே தான் நடந்தது.

பெரிய சிக்கல்
அமெரிக்கர்களின் நலனுக்காகக் குடியரசு கட்சியினருடன் இணைந்து செயல்படத் தயார் என்று அதிபர் பைடன் அறிவித்து உள்ளார். இருப்பினும், கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது, குடியரசு கட்சியினர் நிச்சயம் பைடன் கொண்டு வரம் சட்டத்திற்கு ஒப்புதல் தர மாட்டார்கள். அதேபோல குடியரசு கட்சியினர் கொண்டு வரும் சட்டங்களுக்கும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இருக்கும் செனட் சபையில் ஒப்புதல் கிடைக்காது. இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் பெரிய சிக்கலைத் தரும்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications