வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

17 மணி நேரம் குளியலறையில் சிக்கிய 80 வயது மூதாட்டி.. சரியான நேரத்தில் காப்பாற்றியது Wordle!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பொழுதுபோக்குக்காக ஆன்லைனில் விளையாடப்படும் குறுக்கெழுத்து விளையாட்டான வோர்டுள் 80 வயது மூதாட்டியின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

குறுக்கெழுத்தின் டிஜிட்டல் வடிவம்தான் வோர்டுள் (Wordle) எனும் விளையாட்டாகும். இந்த விளையாட்டை அமெரிக்காவின் மென்பொறியாளர் ஜோஷ் வோர்டுள் என்பவர் உருவாக்கினார். அதனால் அவரது பெயரின் பின்பகுதியே இந்த விளையாட்டிற்கு பெயராக சூட்டப்பட்டது.

இந்த விளையாட்டில் 5 எழுத்துக்களுக்கான இடம் கொண்ட 5 கட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தை உருவாக்கப்படும். அது என்னவென கண்டுபிடிக்க போட்டியாளர்களுக்கு 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

சென்னை ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு..விசாரணை குழு அமைங்க -லோக்சபாவில் கோரிக்கை வைத்த திமுக எம்பி சென்னை ஐஐடி-யில் ஜாதி பாகுபாடு..விசாரணை குழு அமைங்க -லோக்சபாவில் கோரிக்கை வைத்த திமுக எம்பி

மூளைக்கு வேலை

மூளைக்கு வேலை

சரியான எழுத்துகளை உள்ளே பதிவிட்டு சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். ஒருவர் கண்டுபிடித்துவிட்டால் அந்த இடத்தில் வெறும் கட்டங்களை அனுப்பி வேறொருவர் கண்டுபிடிக்கச் சொல்லலாம். மூளைக்கு வேலை கொடுக்கும் என்பதால் இந்த விளையாட்டில் பலர் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள். நியூயார்க் டைம்ஸை ஆய்வை பொருத்தமட்டில் இந்த விளையாட்டை நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் விளையாடுவது தெரியவந்துள்ளது.

சிகாகோ மூதாட்டி

சிகாகோ மூதாட்டி

இந்த வோர்டுள் கட்டங்களை நாமே உருவாக்கி பிறருக்கு அனுப்ப முடியும். இதற்கு கஸ்டம் வோர்டுள் ஆகும். இதை நண்பர்கள், உறவினர்கள் என விளையாடுவர். இந்த நிலையில் இந்த விளையாட்டு ஒரு மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. சிகாகோவை சேர்ந்த 80 வயது மூதாட்டி டென்சி ஹோலட்.

தனிமையை போக்க

தனிமையை போக்க

இவர் பொழுதுபோக்கிற்காக தினந்தோறும் வோர்டுள் விளையாட்டை தனது மகள், குடும்ப உறுப்பினர்களுடன் விளையாடி வருகிறார். தனது தனிமையின் வெறுமையையும் இது போக்குவதால் இந்த விளையாட்டை அந்த மூதாட்டி தவறாமல் விளையாடுவார். இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் விடையை பகிர்ந்து வந்த மூதாட்டி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

17 மணி நேரம்

17 மணி நேரம்

நீண்ட நேரமாகியும் மூதாட்டியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மூதாட்டிக்கு ஏதேனும் ஆபத்து என்பதை உணர்ந்தனர். உடனடியாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது குளிலறையில் 17 மணி நேரமாக பூட்டி வைக்கப்பட்ட மூதாட்டியை போலீஸார் மீட்டனர்.

தூங்கிய மூதாட்டி

தூங்கிய மூதாட்டி

வோர்டுள் விளையாட்டை விளையாடிக் கொண்டே அசதியில் மூதாட்டி தூங்கிவிட்டார். அப்போது இவரது வீட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு நிர்வாணமாக வீட்டுக்குள் நுழைந்த நபர் கத்தரிக்கோலை வைத்து மூதாட்டியை மிரட்டியுள்ளார். உடலில் ரத்தம் வேறு இருந்ததால் மூதாட்டி அச்சமடைந்துவிட்டார். இதனால் அந்த நபர் சொல்வதையெல்லாம் கேட்டு வந்தார். போனை எடுக்கக் கூடாது என்றார் அந்த மூதாட்டி அதையும் செய்தார். ஒரு கட்டத்தில் மூதாட்டியை அந்த நபர் மூதாட்டியை குளிக்க செல்லுமாறு கூறினார்.

குளியலறைக்குள்

குளியலறைக்குள்

அச்சத்துடன் சென்ற மூதாட்டி குளியலைக்குள் சென்றதும் அந்த நபர் வெளிக்கதவை தாழிட்டுவிட்டு தப்பிவிட்டார். பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு மேற்கொண்டதில் அந்த நபர் 32 வயதான டேவிஸ் என்பது தெரியவந்தது. அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிந்தது. இது போல் தனியாக இருப்பவர்களின் வீட்டுக்குள் நுழைந்து மிரட்டுவது இவர் வாடிக்கையாக கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

English summary
Wordle saves 80 years old Chicago woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X