அமெரிக்கா, பிரான்ஸ்சில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் - ஒரே நாளில் பல லட்சம் பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் 12,03,351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,31,53,896 பேராக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ஒரே நாளில் 12,03,351 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 28,31,53,896 பேராக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 6,496 பேர் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 1,792 பேர் மரணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் 935 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துள்ளது. கோவிட் 19 தொடங்கி உருமாறிய பல வைரஸ்கள் மக்களை தாக்கி உயிரைக் குடித்து வருகின்றன. தடுப்பூசி செலுத்தியும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.
ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது.

6,60,604 பேர் குணமடைந்தனர்
கொரோனாவால் ஒரே நாளில் 12,03,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,60,604 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 25,17,57,222 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
2,59,66,387 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

54,30,287 பேர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 6,496 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மொத்தம் 54,30,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

3,05,796 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 3,05,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,41,401 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 1,792 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் கொரோனாவால் மொத்தம் 8,41,977பேர் மரணமடைந்துள்ளனர்.
இங்கிலாந்து பாதிப்பு

புதிய உச்சம் தொட்ட கொரோனா
இங்கிலாந்தில் ஒரே நாளில் 1,29,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,23,38,676 அதிகமாக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் 179,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 93,26,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,23,188 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 99,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,32,297 பேராக அதிகரித்துள்ளது.
Recommended Video

ரஷ்யா, துருக்கியில் பாதிப்பு
இத்தாலி நாட்டில் 78,313 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 57,56,412 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் 1,36,955 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,922 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 935 பேர் மரணமடைந்துள்ளனர். துருக்கி நாட்டில் 32,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 9,365,399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 81,917 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications