ஆசை காட்டி மோசம் செய்த தங்கம், வெள்ளி விலை! நேற்றைய சரிவை விட 2 மடங்கு உயர்வு..நகை கடை பக்கம் கூட போக முடியாது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரே நாளில் சவரனுக்கு 3,600 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து ஜனவரி 21ஆம் தேதி வரை என ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்த நிலையில், இந்த விலை குறைவு அப்படியே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் அதை விட வேகமாக தங்கத்தின் விலை இன்று அதிகரித்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தில் 22 காரட் ஒரு கிராம் தங்கம் 215 ரூபாய் குறைந்த நிலையில் இன்று 450 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 24 மணிநேரத்தில் நேற்றைய சரிவை காட்டிலும் 2 மடங்கு உயர்ந்துள்ளது கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக உள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமைதியான போக்கு உருவான பின்பும் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் வெள்ளி விலை 6.5 லட்சம் வரையில் உயரும் என ராபெர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 450 ரூபாய் விலை உயர்ந்த 14,650 ரூபாய் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,13,600 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்று 3600 ரூபாய் விலை உயர்ந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,46,500 ரூபாயாக விற்கப்படுகிறது.
சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதியோடு ஒப்பிட்டால் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 2210 ரூபாய் விலை உயர்வு கண்டுள்ளது. ஒரு சவரனுக்கு 17,680 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. 24 கேரட் தங்கமும் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது நேற்று 15,491 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று 491 ரூபாய் விலை உயர்ந்து 15,982 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கம் 10 கிராம் 4910 ரூபாய் விலை உயர்ந்து 1, 59,820 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு 370 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 11,850 ரூபாய்க்கு விற்பனையான 18 கேரட் தங்கம் ஒரு கிராம் இன்று 12,220 ரூபாய் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் 2,960 ரூபாய் விலை உயர்வு கண்டு 97,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!!
வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரே நாளில் தடாலடியாக 20 ரூபாய் விலை உயர்ந்து 360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 20,000 ரூபாய் விலை உயர்ந்து 3,60,000 ரூபாய் என புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. நேற்று தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே விலை குறைந்த நிலையில் இந்த விலை குறைவு அப்படியே நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தை எதிர்காலத்திற்காக ரூ.25 லட்சம் சேர்ப்பது எப்படி?
ஆனால் உலக பொருளாதார காரணிகள் தொடர்ந்து தங்கம், வெள்ளி விலையை உயர்த்திய வண்ணம் இருக்கின்றன. உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு மற்றும் சில்வர் விலைகள் வரலாற்றில் இல்லாத உச்சத்தை தொட்டன. அதேதான் இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கிரீன்லாந்து விவகாரம் தணிந்தாலும் அமெரிக்கா வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பது, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம், வெள்ளி விலையை உயர்த்துகின்றன.
Credit: Goodreturns
-
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications