Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mankatha Re Release Day 3 Box Office: அஜித்துக்கு ஓடுற ஒரே ரீ ரிலீஸ் இதுதானா?.. மங்காத்தா 3வது நாள் வசூல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில், புதிதாக வரும் படங்கள் ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுக்க முடியாத சூழலில் கே டிவியில் ஒளிபரப்பப்பட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்து மீண்டும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து வருகின்றனர்.

தங்களின் வீட்டில் படம் பார்க்கும் போது டிவிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்க்கும் ரசிகர்கள், தியேட்டர் என்று வந்துவிட்டால் சரவெடி, ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகளையே தியேட்டருக்குள் வெடித்து கொண்டாடும் அளவுக்கு வெறியேறி விடுகின்றனர்.


Mankatha Re Release Day 3 Box Office Ajith Kumar fans celebratres DIwali in theaters
Photo Credit:

விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் செய்து வசூல் சாதனை படைத்த நிலையில், கடந்த ஆண்டு விஜய்யின் சச்சின் படமும் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படமும் கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆகி பெரும் வசூல் சாதனை படைத்தது.

தியேட்டர்களில் தீபாவளி: இந்நிலையில், இந்த ஆண்டு அஜித் குமாரின் மங்காத்தா படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி தீபாவளி பண்டிகை போல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் ரீ ரிலீஸ் வசூலில் பலத்த அடி வாங்கிய நிலையில், மங்காத்தா படத்தை மட்டுமே நம்பியிருந்த அஜித் ரசிகர்கள் அந்த படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் ஒரு படம்: இந்த ஜனவரி மாதம் ஒவ்வொரு வாரமும் ஒரு படம் ஓடி தியேட்டர்களுக்கு ரசிகர்களை அழைத்து வந்து விடுகிறது. ஜனவரி முதல் வாரம் டல் அடித்த நிலையில், 10ம் தேதி வெளியான பராசக்தி சனி மற்றும் ஞாயிறு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தது. பொங்கல் விடுமுறை வரை ஓரளவுக்கு ரசிகர்களை அந்த படம் அழைத்து வந்து 100 கோடி வசூல் போஸ்டரையும் வெளியிட்டது. கார்த்தியின் வா வாத்தியார் படம் படுதோல்வியை சந்திக்க ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பொங்கல் வாரத்தை ஓட்டியது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஓரளவுக்கு ஒரு சில தியேட்டர்களுக்கு நல்ல வசூல் மழையை அஜித் குமாரின் மங்காத்தா ரீ ரிலீஸ் கொடுத்து காப்பாற்றியுள்ளது.

மங்காத்தா 3 நாள் வசூல்: தமிழ்நாட்டில் ஓபனிங் கிங்கான அஜித் குமார் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், முதல் நாளில் 3.75 கோடி வசூலை ஈட்டியது. 2வது நாளான சனிக்கிழமை 2.75 கோடி ரூபாய் வசூலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டி ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 10.25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குடியரசு தினமான இன்றும் மங்காத்தா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 கோடி பட்ஜெட்டில் வெளியான திரெளபதி 2 மற்றும் விக்னேஷ் கார்த்திக்கின் ஹாட்ஸ்பாட் 2 மச் உள்ளிட்ட படங்கள் இதுவரை 1 கோடி வசூலை கூட எட்டவில்லை என்பது தான் நிதர்சனம்.

Credit: Filmibeat

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+