பராசக்தி படத்தை திட்டமிட்டபடி இறக்கும் படக்குழு.. சென்சார்லாம் பிரச்சனை இல்லை.. பொங்கலுக்கு தீ பரவுவது உறுதி
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது எனவே பொங்கலுக்கு ரிலீஸாகுமா இல்லையா என்ற கேள்வி பலரிடம் எழுந்திருந்தது. இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் திட்டமிட்டபடி ஜனவரி பத்தாம் தேதியே படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சூரரைப் போற்று இயக்கி இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநராக சுதா திகழ்ந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் கதையையும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்.

படத்துக்கு வந்த பிரச்சனை?: முதலில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியிட்டுவிட்டு; சில காரணங்களால் நான்கு நாட்களுக்கு முன்னரே அதாவது பத்தாம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகனோடு மோதும் சூழல் உருவானது. ஆனால் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழை கொடுக்காததால் அந்தப் படம் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப்போய்விட்டது. எனவே பராசக்தி சோலோ ரிலீஸாகும் நிலைமை உண்டானது.
இதற்கும் இல்லை: ஆனாலும் பராசக்தி படத்துக்கும் சென்சார் அதிகாரிகள் சன்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்துவந்தார்கள். மொத்தம் 23 இடங்களில் கட் சொன்னதாகவும்; அவர்களிடம் படக்குழு பேசி; சொல்லப்பட்ட கட்டுகளை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திட்டமிட்டபடி சென்சார் சான்றிதழ் கிடைப்பதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை என கருதப்பட்டது. மேலும் சிங்கப்பூரில் ரிலீஸ் ஆவதற்கான சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது.
தளபதி வெற்றி கொண்டானுக்கு வெற்றி கிடைக்குமா? நாளைய தீர்ப்பு நாயகனுக்கு நாளை காலை 10.30க்கு தீர்ப்பு!
இங்கும் கிடைத்துவிடும்: வெளிநாடுகளில் ரிலீஸாவதற்கான அத்தனை விஷயங்களும் நடந்துவிட்டதால்; கண்டிப்பாக இந்தியாவிலும் திட்டமிட்டபடி பத்தாம் தேதி படம் வரும் என்று கருதப்பட்டது. சூழல் இப்படி இருக்க பராசக்தி படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும்; இன்று அதுகுறித்த அறிவிப்பை படக்குழுவே போஸ்டரோடு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
நாளை பரவும் தீ: அதன்படி, 'இன்னும் இரண்டு நாட்களில் பெரிய திரையில் புரட்சி தொடங்கும். பராசக்தி ஜனவரி பத்தாம் தேதி முதல் திரையரங்குகளில்' என குறிப்பிட்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் திட்டமிட்டபடி பத்தாம் தேதி படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் காரணத்தை காட்டி இப்படத்தையும் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளி வைத்துவிடுவார்களோ என பயந்துகொண்டிருந்த எஸ்கேவின் ரசிகர்களுக்கு; டான் பிக்சர்ஸின் இந்த ட்வீட் உச்சக்கட்ட மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்திருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடுவதற்கும் அவர்கள் தைரியமாக தயாராக ஆரம்பித்துவிட்டார்கள்.
Credit: Filmibeat
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications