ஜீ5-ல் வெளியான ‘தடயம்’ – உண்மை சம்பவத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சமிட்ட த்ரில்லர் சீரிஸ்.. ரிவ்யூ இதோ!
சென்னை: தடயம் வெப் சீரிஸ் (Thadayam web series review) இன்று முதல் ZEE5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில், சமுத்திரக்கனி - ஷிவதா இணைந்து நடித்துள்ள இந்த தொடர், 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதிகளில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

கதை என்ன சொல்கிறது
வெறும் ஏழு கொலைகளை மறைக்க அதிகார வர்க்கத்தின் சுயநலத்தால் இன்னும் பல உயிர்கள் பலியாகும் ஒரு கருப்பு வரலாற்றை இந்த சீரிஸ் பேசுகிறது. ஒரு சாதாரணக் கேஸ் போல தொடங்கும் விசாரணை, போகப் போக பெரிய சதி, அதிகார துஷ்பிரயோகம், மனிதாபிமானமற்ற முடிவுகள் ஆகியவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. ஒரு சைக்கோ த்ரில்லர் போல் தொடங்கி, கடைசியில் சமூக நீதி பேசும் வகையில் கதை மாறுகிறது.
சமுத்திரக்கனி - ரியலிஸ்டிக் போலீஸ்
எஸ்.ஐ. அதியமானாக சமுத்திரக்கனி வருவது தான் சீரிஸின் ஹைலைட். போலீஸ் ஸ்டேஷனை விட டீக்கடையில் உட்கார்ந்து இருப்பவர், மேலதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்காதவர், 'கேர்லெஸ்' ஆபீசர் மாதிரி ஆரம்பத்தில் காட்டப்பட்டாலும், விசாரணைக்கு வந்தவுடன் அவர் எடுக்கும் வேகம் வேற லெவல். அவர் கிளூக்களை தேடும் போதே நாமும் அவருடன் சேர்ந்து அந்த கேஸை ஃபாலோ பண்ண ஆரம்பித்து விடுகிறோம். அந்த அளவுக்கு நம்ப வைக்கும் நடிப்பு.
ஷிவதா மற்றும் மற்றவர்கள்
இன்ஸ்பெக்டர் லெட்சுமியாக வரும் ஷிவதா, காக்கி உடையிலும் நிச்சயதார்த்த பெண்ணாக வரும் சீன்களிலும் இரண்டு வேற லுக்கில் நன்றாகத் தெரிகிறார். சமுத்திரக்கனியுடன் சேர்ந்து கேஸை நெருங்கும் இடங்களில் நல்ல ஸ்கிரீன் பிரசென்ஸ்.
ஆந்திர உயரதிகாரியாக வரும் சுந்தரபாண்டியன் மனிதாபிமானமில்லாத அதிகார முகத்தை காட்டி மிரட்டுகிறார். பழிவாங்கும் வெறியில் ஊரையே சுடுகாடாக்கும் அண்ணன்-தம்பி கதாபாத்திரங்கள், குறிப்பாக அண்ணனாக வரும் ராஜ் திரந்தஸ் உடல்மொழி - இந்த சீரிஸ்க்கு பதட்டத்தை கூட்டுகிறது.
டெக்னிக்கல் பக்கம்
குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும், காட்சிகளின் தரம் நல்ல சினிமா அனுபவத்தை தருகிறது. வறண்ட நிலப்பரப்பை பயன்படுத்திய ஒளிப்பதிவு, கொலைகளின் தீவிரத்தை உணர வைக்கிறது. பின்னணி இசை ஒவ்வொரு சீனிலும் டென்ஷனை கூட்டுகிறது. தேவையற்ற கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல் கதையை நேராக சொல்லியிருப்பது இயக்குநரின் பலம்.
பிளஸ் - மைனஸ்
தமிழக-ஆந்திர காவல்துறைகளுக்கிடையிலான ஈகோ, போட்டி, அதிகார அரசியல் ஆகியவை ரியலிஸ்டிக்காக காட்டப்பட்டிருப்பது பெரிய பலம். சமுத்திரக்கனியின் எதார்த்தமான நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை தொடரை இழுத்துச் செல்கிறது. அதே நேரத்தில் சில வன்முறை காட்சிகள் மென்மையான மனநிலையுள்ள பார்வையாளர்களுக்கு சற்று சங்கடமாக இருக்கலாம்.
மொத்தத்தில், அதிகாரப் பசிக்கு எளிய மக்கள் எப்படி பலியாகிறார்கள், காவல்துறையின் இருண்ட பக்கம் என்ன என்பதைக் கூர்மையாக பேசும் த்ரில்லர் தான் 'தடயம்'. சஸ்பென்ஸ் - இன்வெஸ்டிகேஷன் ஜானர் பிடிக்கும் பார்வையாளர்களுக்கு இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு சீரியஸ் வெப் தொடர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications