• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி திரைப் பட்டாசுகள் !

By Staff
|

இந்த ஆண்டு 11 படங்களுடன் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்கிறது கோலிவுட்.

சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியோரது படங்கள் இல்லை ஏதும் இந்த வருடம் இல்லை. புதிய தலைமுறை சூப்பர்ஸ்டார்களான விக்ரம், விஜய் படங்களும் திரைக்கு வரவில்லை.

மாறாக, விஜயகாந்த், சரத்குமார், தனுஷ், சிம்பு, அஜீத், சத்யராஜ் ஆகியோரது றெக்கை கட்டி நிற்கின்றன.

விஜயகாந்த்தின் நெறஞ்ச மனசு, சரத்குமாரின் சத்ரபதி, தனுஷின் ட்ரீம்ஸ், அஜீத்தின் அட்டகாசம், சிம்புவின் மன்மதன்,சத்யராஜின் மகா நடிகன் மற்றும் மீசை மாதவன், ஜனனம், காதலே எங்கள் தேசிய கீதம் ஆகிய படங்கள் இந்த தீபாவளிக்குவெளியாகின்றன.

இவை தவிர கிரிவலம், ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த்தின் சதுரங்கம் ஆகிய படங்களும் தீபாவளி ரிலீஸுக்குத் தயாராக உள்ளன.ஆனாலும், பெரிய படங்கள் ரிலீஸாவதால், தங்களது படங்கள் காணாமல் போய் விடலாம் என்ற பயத்தால், இவற்றின் ரிலீஸைகொஞ்சம் தள்ளி வைக்க மேற்படி படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனராம்.

தீபாவளிக்கு வரப் போகும் படங்கள் குறித்து ஒரு வேகமான அலசல்:

நெறஞ்ச மனசு: ஊரை திருத்தும் விஜய்காந்த்...

Vijaykanth and Susenவிஜயகாந்த் அதிகம் எதிர்பார்க்கும் படம். பாமக மற்றும் தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் பாலிட்டிக்ஸால் கஜேந்திரா படு அடிவாங்கியது. இதனால் கொதிப்படைந்துள்ள விஜயகாந்த் நெறஞ்ச மனசு படம் மூலம் தனது செல்வாக்கை நிரூபிக்க துடிப்புடன்காத்துள்ளார்.

செல்லமே வெற்றிப் படத்தைத் தயாரித்த ஜி.ஜே. கம்பைன்ஸ் நிறுவனத் தயாரிப்பான நெறஞ்ச மனசு படத்தில், விஜயகாந்த்துக்குசூசன் என்ற சுந்தரி ஜோடியாக நடித்துள்ளார். மகிமா என்று இன்னொரு ஜோடியும் உள்ளது. வில்லனாக வருகிறார் பசுபதி.அழுகைக்கும், சென்டிமென்ட்டுக்கும் ஆச்சி மனோரமா உள்ளார்.

சரியான கிராமத்துக் கதை. கிட்டத்தட்ட சின்னக் கவுண்டர், சொக்கத் தங்கம் படம் போல விஜயகாந்த்துக்கு நடிப்பில் ஸ்கோர்பண்ணக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ள படம்.

படத்தின் கதை சுருக்கம்: மதுரைக்கு அருகே உள்ள சூரியக்குடி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (விஜயகாந்த்தான்).அய்யனாரின் குடும்பம் மிகப் பெரியது. மூத்த வாரிசு இவர்தான்.

அய்யனாரின் ஊரில் உள்ள (அவரது குடும்பத்தையும் சேர்த்து) அத்தனை பேருக்கும் தொழிலே திருட்டுதான். இவர்களைத்திருத்த அய்யனாரின் அப்பா எவ்வளவோ முயற்சிக்கிறார். ஆனால் அவர்கள் திருந்துகிற மாதிரி இல்லை. இந்த சமயத்தில்,அய்யனாரின் அப்பா மரணமடைகிறார். இறக்கும் தருவாயில், ஊரைத் திருத்த நீதான் முயற்சிக்க வேண்டும் என்று மகனிடம்உறுதி வாங்குகிறார். திருத்திக் காட்டுகிறேன் என்று அப்பாவிடம் வாக்குறுதி கொடுக்கிறார் அய்யனார்.

அப்பாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற களம் இறங்குகிறார் அய்யனார். ஆனால் அவருக்கு உறவினர்கள் பசுபதி,மன்சூர் அலிகான் ரூபத்தில் எதிர்ப்பு கிளம்புகிறது. உறவுகளை மீறி எப்படி குடும்பத்தையும் ஊரையும் அய்யனார் திருத்துகிறார்என்பதுதான் படத்தின் கதை.

கோவை மாவட்ட குளுமையை கேமராமேன் பிரதாப் அட்டகாசமாக படம் பிடித்துள்ளார். படத்திற்காக அய்யனார் கோவில்ஒன்றையும் கட்டி அசத்தியுள்ளனர். படத்தை இயக்கியுள்ள சமுத்திரக்கனிக்கு இது முதல் படமல்ல. ஏற்கனவே பின்னணிப் பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்தப் படமான உன்னைச் சரணடைந்தேன் என்ற அருமையான படத்தை இயக்கிய அனுபவம்உள்ளவர்.

இசை கார்த்திக் ராஜா. அப்பாவின் பெயரை காப்பாற்றும் வகையில் மெலடி ரக பாடல்களைப் போட்டு அசத்தியுள்ளாராம்.

சத்ரபதி: துஷ்டர்களை வேட்டையாடும் சரத்குமார்

Sarathkumar and Nikithaசரத்குமார் "சதைப்பிடிப்போடு" நடித்துள்ள இன்னும் ஒரு ஆக்ஷன் படம்.

கலைஞர்கள்: சரத்குமார், நிகிதா, வடிவேலு, ராஜேஷ், வாசு விக்ரம், பிரமிட் நடராஜன், சரண்யா, சபீதா ஆனந்த், பூஜா. இசைஎஸ்.ஏ.ராஜ்குமார், கேமரா கார்த்திக் ராஜா, இயக்கம் ஸ்ரீமகேஷ். தயாரிப்பு பாபு ராஜா.

சமூகத்தைப் பாதிக்கும் துஷ்டர்களை வேட்டையாடும் நல்லவனைப் பற்றிய வழக்கமான கதைதான் சத்ரபதி. இருப்பினும் இதில்சமூக விரோதிகளை சரத்குமார் வித்தியாசமான அணுகுமுறையுடன் வேட்டையாடுகிறாராம்.

நிஜத்தில் நடந்த சில சம்பவங்களையும் படத்தில் சேர்த்திருக்கிறார்களாம். இதனால் படம் படு விறுவிறுப்பாக இருக்கும் என்கிறார்புதுமுக இயக்குனர் ஸ்ரீமகேஷ். படத்தின் கதையை யாராலும் ஊகிக்க முடியாதாம். கிளைமாக்ஸின்போதுதான் பல சஸ்பென்ஸ்காட்சிகளுக்கு விளக்கம் கிடைக்குமாம். அந்த அளவுக்கு திறமையாக திரைக்கதை அமைத்துள்ளாராம் மகேஷ்.

சரத்துக்கு ஜோடியாக நிகிதா வருகிறார். குறும்பு படத்தில் தியாவுடன் சேர்ந்து கலக்கியவர் நிகிதா. ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் ரம்பா.

நெல்லை, தூத்துக்குடி, பாண்டிச்சேரி என பல பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். சத்ரபதி, சரத்குமாரின் திரையுலகவாழ்க்கையில் இன்னும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று தயாரிப்பாளர் பாபுராஜா நம்பிக்கையுடன் கூறுகிறார். இவர்ஏற்கனவே அரசு படத்தை சரத்குமாரை வைத்து தயாரித்து பெரும் வெற்றியைப் பெற்றவர்.

மகா நடிகன்: ஒரு நடிகன் முதல்வராகிறான்

Sathyaraj சத்யராஜை வைத்து அடிதடி படத்தைக் கொடுத்த சுந்தரி பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் மகா நடிகன். சத்யராஜின் லொள்ளுத்தனத்தை பலமாகக் கொண்டு மகா நடிகனை உருவாக்கியுள்ளார்கள்.

படம் முழுக்க அரசியல்வாதிகளை படு பயங்கரமாக கலாய்த்துள்ளாராம் சத்யராஜ்.

சாதாரண துணை நடிகராக வாழ்க்கையை ஆரம்பிக்கும் சத்யா (சத்யராஜ்) படிப்படியாக ஹீரோவாக உயர்கிறார். பின்னர்அரசியலுக்குள் நுழைகிறார், முதல்வர் பதவியையும் பிடிக்கிறார். அதன் பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதை தனக்கே உரியநகைச்சுவை பிளஸ் நையாண்டி கலந்து மகா நடிகனை உருவாக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

ஏற்கனவே சத்யராஜை வைத்து என்னம்மா கண்ணு என்ற கலக்கல் காமடிப் படத்தைக் கொடுத்தவர் ஷக்தி சிதம்பரம். இப்போதுமகா நடிகனிலும் கலக்கியுள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

பலவித கெட்டப்களில் சத்யராஜ் வருகிறார். அவருக்கு ஜோடியாக நமீதா மற்றும் மும்தாஜ். இருவரும் நடிகைகளாகவேநடிக்கிறார்கள்.

தமிழக அரசியலையும், தமிழ்த் திரையுலகையும் கிழி கிழியென்று தனது வசனத்தால் கிழித்துள்ளாராம் ஷக்தி சிதம்பரம். பலஅரசியல்வாதிகளையும், சினிமா நடிகர்களையும் நக்கல் செய்வது போல பல காட்சிகளும் உண்டாம்.

தீபாவளிக்கு வெளியாகும் பட்டாசுகளில் இது சரவெடியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

அட்டகாசம்: தல அஜீத்தின் தலை தப்புமா?

Ajithஅஜீத் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம். சரண் இயக்கியிருக்கிறார்.

அஜீத் மெகா ஹிட் படம் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது. தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களையே தந்து வரும் குறையைஅட்டகாசம் தீர்த்து வைக்கும் என்று தல அஜீத் நம்பியிருக்கும் படம் இது.

படத்தில் அஜீத்திற்கு குரு, ஜீவா என இரண்டு கேரக்டர்கள். குரு அமைதியானவன், நல்லவன் என்று பெயர் எடுத்தவன், அம்மாசெல்லம். மாறாக ஜீவா மோசமானவன், தூத்துக்குடியைக் கலக்கும் மிகப் பெரிய தாதா.

இந்த இரு துருவங்களையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அஜீத் தவிர பூஜா, நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா,வையாபுரி, கருணாஸ், சுஜாதா, பாபு ஆண்டனி, ஹனீபா ஆகியோரும் உள்ளனர்.

சரண் படம் என்பதால் வழக்கம் போல பரத்வாஜ் இசையமைத்துள்ளார், சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளைக்கவனித்துள்ளார். படத்தில் சண்டைக் காட்சிகள் படு சூப்பராக இருக்குமாம். படத்தை அஜீத்தின் நண்பரான கார்த்திகேயன்தயாரித்துள்ளார்.

அமர்க்களம் போல இந்தப் படமும் சரண்-அஜீத்-பரத்வாஜ்-வைரமுத்து கூட்டணிக்கு பெரும் வெற்றிப் படமாக அமையும் என்றுநம்புவோம்.

மன்மதன்: சிம்புவின் உல்டா புல்டா

Simbu and Yanaகமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் கதையை கொஞ்சம் போல சுட்டு, அதை அப்படி இப்படி உல்டா புல்டா செய்து, தனதுபாணியில் கொடுத்துள்ளார் சிம்பு.

முருகன் என்ற புதுமுக இயக்குநர்தான் படத்தை இயக்கியது. ஆனால் அவருக்கும் சிம்புவுக்கும் ஒத்துவராததால், பாதிப் படத்திற்குமேல் சிம்புவே இயக்கவும் செய்துள்ளார்.

படத்தின் கதை, வசனம் சிம்புதான். அவருக்கு ஜோடியாக வருபவர் ஜோதிகா. அதுதவிர ஏராளமான மும்பை அழகிகளும்நடித்துள்ளார்கள். போதாக்குறைக்கு மந்திரா பேடியும் இருக்கிறார்.

கவர்ச்சியை அள்ளித் தெளித்திருத்திருக்கிறார்களாம். அதுதான் படத்தின் பலமும் கூட. சிம்பு சும்மா விளையாடியிருக்கிறாராம் -நடிப்பில் அல்ல, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில்.

படத்தின் கதை ரொம்ப சிம்பிள். காதலிக்கிறார் சிம்பு. அது தோல்வியில் முடிகிறது. இதனால் பெண்கள் என்றாலே வேப்பங் காயாககசக்கிறது அவருக்கு. பெண்களை பழி வாங்க புறப்படுகிறார். ஆனால் ஜோதிகா விஷயத்தில் அவர் தோற்று விடுகிறார். சிம்புவைநார்மல் நிலைக்குக் கொண்டு வருகிறார் ஜோதிகா.

படத்தில் இரட்டை வேடத்தில் வேறு வருகிறாராம் சிம்பு. ஒரு கேரக்டருக்காக மொட்டையும் போட்டிருக்கிறாராம். இளையஇசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவின் எலக்ட்ரிக் இசையில் இளசுகளை ஆட வைக்கும் வகையில் பாட்டுக்கள்போட்டிருக்கிறார்கள்.

தாறுமாறான பட்ஜெட்டில் படு பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் சிம்பு ரசிகர்களுக்கு சரியான இளமை விருந்தாகஇருக்கும்.

ஜோதிகா தொடங்கி படத் தயாரிப்பு, இயக்கம் வரை பல பிரச்சினைகளை சந்தித்துள்ள மன்மதன் ஒரு வழியாக தீபாவளிக்குவெளியாகிறது.

ட்ரீம்ஸ்: துள்ளுவதோ இளமை- பார்ட் 2

Dhanush and Diyaசிம்புக்கு கடும் போட்டியாக கருதப்படும் தனுஷ் நடித்து வெளியாகும் இளமை துள்ளும் இன்னொரு படம் ட்ரீம்ஸ்.

தியா, பாரூல் என இரண்டு ஹீரோயின்களுடன் களம் இறங்குகிறார் தனுஷ். வழக்கமான கல்லூரிக் கதையாம். ஆனாலும்ரொம்பவே வித்தியாசமாக பண்ணியிருக்கிறாராம் தனுஷ். அவரது அப்பா கஸ்தூரிராஜாதான் டைரக்டர்.

அப்பாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள முதல் படம். அப்பா இயக்குநர் என்பதால் காதல் காட்சிகளில் முதலில் நெளிந்தாராம்தனுஷ். ஆனால் உறவு வேறு, தொழில் வேறு என்று அப்பா பால பாடம் நடத்தியதால் தெளிந்து, காதல் காட்சிகளில் புகுந்துவிளையாடியிருக்கிறாராம்.

தியாவும், பாரூலும் கவர்ச்சியில் களேபரம் செய்திருக்கிறார்கள். தனுஷ் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் மிகவும் ரிஸ்க் எடுத்துசெய்திருக்கிறார்களாம். சண்டையில் புது வேகம் காட்டியிருக்கிறார் தனுஷ். பரத்வாஜ் இசையில் பாட்டுக்கள் படு அட்டகாசமாகவந்துள்ளதாம்.

கல்யாணத்திற்கு முன்பாக வெளியாகப் போகும் படம் என்பதால் தனுஷும், அவரது எதிர்கால மனைவி ஐஸ்வர்யாவும் ட்ரீம்ஸ்குறித்து அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

சரி, கதையை சொல்ல மறந்து விட்டோமே, நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை பிடித்துக் கொள். இதுதான் கதையின்சுருக்கமாம். கவர்ச்சி, காமம், மோகத்தில் கிட்டத்தட்ட துள்ளுவதோ இளமையின் அடுத்த எடிஷன் தான் இது என்கிறார்கள்.

சதுரங்கம்: அஞ்சாத நிருபர் வீரபத்ரன் ஸ்ரீகாந்த்

Srikanth and Soniaஸ்ரீகாந்த்தின் எட்டாவது படம். போஸ் சுமாரான வெற்றியைப் பெற்றதால், சதுரங்கத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஸ்ரீகாந்த்.இதுவும் ஆக்ஷன் படம்தானாம்.

ஸ்ரீகாந்த்தை வைத்து பார்த்திபன் கனவு என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்த இயக்குநர் கரு. பழனியப்பனின் இரண்டாவதுபடம் இது. எனவே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பலாம்.

இந்தப் படத்தில் ஒரு பத்திரிக்கை நிருபராக நடிக்கிறார் ஸ்ரீகாந்த். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால். மனதில்நினைத்ததை அப்படியே எழுத்திலும் கொண்டு வருவதால் ஏற்படும் பல பிரச்சினைகளை எப்படி ஸ்ரீகாந்த் சமாளிக்கிறார், தனதுஇலக்கை எப்படி அடைகிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

சோனியா அகர்வாலுக்கும் இதில் நல்ல கேரக்டராம். இதுவரை பதுமை போல வந்து கொண்டிருந்த அவர் இந்தப் படத்தில்நடிப்பில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

வித்யாசாகர், இசையில் மெலடி மேளாவே நடத்தியிருக்கிறாராம். ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் தவிர மனோபாலா,மணிவணணன், மயில்சாமி, சரண்யா, விநோதினி உள்ளிட்டோரும் படத்தில் அடக்கம்.

சதுரங்கம் தீபாவளிக்கு வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனவே படம் ரிலீஸானால், தீபாவளியன்று நல்ல படத்தைபார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும்.

மீசை மாதவன்: காதல் காமெடி கலாட்டா

Kutti Radhikaமலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற காமடிப் படமான காபூலிவாலாதான் மீசை மாதவன் என்ற பெயரில் தமிழில்உருமாற்றம் பெற்றுள்ளது.

ரமணா என்ற புதுமுக ஹீரோ இதில் அறிமுகமாகிறார். இவர் விஜயபாபு என்ற நடிகரின் (படிக்காதவன் படத்தில் ரஜினிக்குதம்பியாக வருவாரே, அவரேதான்) மகன். இவருக்கு ஜோடியாக குட்டி ராதிகா. படத்தை இயக்கியுள்ளது எஸ்.ஏ.சந்திரசேகரின்சிஷ்யரான ரமேஷ்.

கிட்டத்தட்ட அபூர்வ சகோதரர்கள் மாதிரி சர்க்கஸை பின்னணியாகக் கொண்ட கதைக் களம். சர்க்கஸ் கம்பெனி நடத்துபவர்ஆனந்தராஜ். இவரது மகள் குட்டி ராதிகா. செல்ல மகளான ராதிகாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் ஆனந்தராஜ். ஆனால்ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போடுகிறார். அதாவது நான் பார்த்து வைக்கும் பையனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும், யாரையும் காதலிக்கக் கூடாது என்று.

ஆனால் குட்டி ராதிகாவுக்கு, ரமணா மீது காதல் பிறக்கிறது. கூடவே பிரச்சினையும் கிளம்புகிறது. முதலில் எதிர்க்கும் ஆனந்தராஜ்,பின்னர் மனசு மாறி ராதிகாவை, ரமணாவுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்.

கல்யாணத்தின்போது ரமணாவின் பெற்றோர் என்று கூறிக் கொண்டு சிலர் வந்து அவரை தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மிகவும் காமடியாகவும், சுவாரஸ்யமாகவும் கொண்டு சென்றுள்ளாராம்இயக்குநர்.

காமடிக்கு பாண்டு, மணிவண்ணன், தங்கராஜ், இளவரசு ஆகியோர் உள்ளனர். இவர்கள் தவிர சபீதா ஆனந்த், ராஜீவ் ஆகியோரும்உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரணி இசையமைத்துள்ளார்.

ஜனனம்: ஒரு வழியாய்..

Arun Kumar and Priyankaநீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த படம். இந்தப் படம் ஜனனம் ஆகுமா என்பதே சந்தேகமாக இருந்தது. அருண்குமார் இந்தப்படத்தின் மூலம் தனக்கு ஒரு பிரேக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதில் கதாநாயகியாக நடித்த ப்ரியங்கா திரிவேதி பாதியிலேயே கன்னட நடிகர் உபேந்திராவுடன் கல்யாணம் பண்ணிக் கொண்டுலேச்சு போத்தாமா செய்துவிட்டதால் (ஓடிப் போய் விட்டதால்), படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தடுமாறியதுயூனிட்.

அப்புறம், பிரியங்காவை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்தனர். கல்யாணத்திற்கு முன் உடை அணியவே மறுத்து அடம்பிடித்தபிரியங்கா கல்யாணத்துக்கு பின் திடீரென நான் கவரிசி காட்ட மாட்டேன் என அடம் பண்ணி படக்குழுவினரைப் பாடாய்படுத்திவிட்டாராம்.

ஒரு வழியாய் படத்தை முடித்து, தீபாவளியன்று ரிலீஸ் செய்துவிட்டு, அடுத்த படத்தில் இறங்கும் முடிவில் இருக்கிறது ஒட்டுமொத்த யூனிட்டும். படம் ஓடுகிறதா இல்லையா என்று கூட அவர்கள் கவலைப்படப் போவதில்லையாம். அவ்வளவுடார்ச்சர்களை சந்தித்துவிட்டார்களாம்.

படித்து பட்டம் பெற்றுவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களைப் பற்றிய கதை இது. ரமேஷ் என்பவர்இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியில் தான் அருண்குமாரின் திரையுலக எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

காதலே எங்கள் தேசிய கீதம்: கவர்ச்சியே பிரதானம்

Sriram and Varshiniபடத்தின் தலைப்பில் இருந்தே யூகித்து விடலாம், இது வழக்கமான காதல், மோதல் கதைதான் என்பதை. சிந்துபாத்புரொடக்ஷன்ஸ் மற்றும் பிரெஸ்டிக் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ரீராம் ராகவன், வர்ஷினி என்றஇரண்டு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

விஜய் ஆனந்த என்பவர் இயக்கியிருக்கிறார். கவர்ச்சியை பிரதானமாக நம்பி படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏகப்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளிக்கு நெறஞ்ச மனசு,சத்ரபதி, அட்டகாசம், மன்மதன், ட்ரீம்ஸ், மீசை மாதவன் ஆகிய படங்கள் வெளியாவது மட்டுமே உறுதியாக உள்ளது. மற்றபடங்கள் குறித்து உறுதியில்லை.

திருட்டு விசிடிக்கு வேறு தமிழக அரசு ஆப்பு வைத்து விட்டது. இதனால், புது டிரஸ்ஸோடு திருட்டு விசிடி கேட்டு கடை, கடைக்கு கீரோ கோண்டாவில் அலைந்து பெட்ரோலை வீணடிக்காமல், தியேட்டருக்குப் போய் தீபாவளி படங்களை பாருங்கப்பா...

ரொம்ப முக்கியமான நியூஸ்:

இஞ்சி இடிப்பழகி சிம்ரனுக்கு இது தலை தீபாவளிங்கோ!

டேஞ்சரஸ் இடை, மயக்கும் நடை, கொஞ்சமாய் உடை என சகலகலாவல்லியாய் சமீப காலம் வரை தமிழ் சினிமா ரசிகர்களுக்குநிரந்தர காய்ச்சலாக இருந்தவர் சிம்ரன்.

குஷ்புவுக்குப் பிறகு தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட சிம்ஸை, கல்யாணமாகி விட்டாலும்கூட மறக்க முடியாத தேவதாஸ் ரசிகர்கள் ஏராளம். அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றவே இந்த கடைசி பிட் நியூஸ்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X