ஐப்பசி துலா ஸ்நானம்..காவிரியில் புனித நீராடி தர்ப்பணம் அளித்தால் என்னென்ன நன்மைகள்!
சென்னை: ஐப்பசி மாதம் காவிரியில் ஒருநாள் நீராடினால் கூட கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து சேருவதால், இதில் நீராடுவதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை கிடைக்கும்.
தீராத நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல். வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக துலா நீராடல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுவது உண்டு. அந்தவகையில் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று போற்றுவர். இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு 'துலா' மாதம் என்று பெயர்.
எந்த மாதத்திற்கும் இல்லாத சிறப்பு, ஐப்பசி மாதத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதம் முழுவதும் சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே ஐப்பசி முதல் தேதி அன்று காவிரியில் நீராடுவது புண்ணியம் என்கின்றன ஞான நூல்கள். இந்த மாதத்தில் காவிரி நதியில் குளிப்பது மிகவும் விசேஷமானது. பொதுவாகவே நதியில் நீராடுவது விசேஷம். அதிலும் காவிரி நதி என்பது புண்ணிய நதி. எனவே காவிரி நதியில் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் ஐப்பசி மாதத்தில் நீராடுவது மகா புண்ணியம் என்று போற்றுகிறார்கள்.

ஐப்பசி புனித நீராடல்
ஐப்பசி மாதத்தில் எல்லா நாள்களிலும் காவிரி துலாக் கட்டத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. காவிரியில் தினசரியும் நீராடினால் நன்மைதான் என்றாலும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் ஐப்பசி மாதமானது துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.

மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும்
துலா மாதத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை நாழிகை நேரத்திற்கு முன், காவிரியில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் நீராடுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. பல பெருமைகளை பெற்ற காவிரியில் துலாம் மாதமாகிய ஐப்பசியில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும்.

துலாம் நீராடலின் அவசியம்
காவிரி நதியில், ஐப்பசி மாதத்தில் மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் கலப்பதாக சொல்கின்றன ஞானநூல்கள். எனவே, ஐப்பசி மாதம் எனப்படும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுவது அத்தனை தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலன்களை கொடுக்கும். ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது. புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் புனித நீராடுவது அவசியம் என்கிறது சாஸ்திரம்.

யாரெல்லாம் புனித நீராடலாம்
தீர்த்த யாத்திரை சென்று புண்ணிய நதிகளில் நீராடவும் ஒரு அமைப்பு வேண்டும். ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என போற்றப்படுகிறது. கால புருஷனுக்கு தனுசு ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார்.

பித்ரு சாபம் நீங்கும்
காவிரியில் நீராடினால், புத்தியில் தெளிவு பிறக்கும். பித்ருக்கள் சாபம் நீங்கப் பெறலாம்.குடும்பத்தில் இருந்த குழப்பங்களும், பிரிவுகளும் நீங்கும். தம்பதிகளுக்கிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். முன் ஜென்ம பாவங்களெல்லாம் தீரும். தீர்த்தக் கடன் செலுத்துவோரின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும், அஞ்ஞானத்தையும் போக்கி, சகல சௌபாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி. துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நீங்கிவிடும். அழகு, ஆயுள், உடல்நலம் வளம் பெறும்.

துலா ஸ்நானம் செய்ய சிறந்த இடங்கள்
காவிரியில் ஒரேயொரு முறை நீராடினால், கங்கையில் ஆயிரம் முறை நீராடிய புண்ணியம் கிடைக்கும். தீராத நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல். காவிரி ஓடும் ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, சங்கமேஸ்வரர் கோயில் படித்துறை, திருவையாறு, திருவிடைமருதூர், பூம்புகார், பவானி, கும்பகோணம், குணசீலம், தலைக்காவிரி, திருச்சி முக்கொம்பு ஆகிய இடங்கள் புனித ஸ்நான கட்டங்களாகக் கருதப்படுகிறது.

மயிலாடுதுறை துலாக்கட்டம்
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற புகழுடன் திகழ்கிறது மயிலாடுதுறை. துலா காவிரி நீராடல் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும் என்று நதி தேவதைகளிடம் பிரம்மா கூறினார். துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு வைபவம்' அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு துலா ஸ்நானம் இன்று தொடங்கியுள்ளது. கடைமுழுக்கு நவம்பர் 16ஆம் தேதியாகும்.

அன்னதானம் செய்வது சிறப்பு
துலா ஸ்நானம் செய்யும்போது, தம்பதியாக நின்று காவிரியில் நீராடுவது இன்னும் பலன்களை தந்தருளும் என்பதாக ஐதீகம். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாரிசு இல்லாத தம்பதிக்கு, பிள்ளை பாக்கியம் கிடைக்கும். முன்னோர்களுக்கான பிதுர் பூஜையை செய்து வழிபட்டால் குடும்பத்தில் எடுத்த சுபகாரியம் நல்ல முறையில் நிறைவேறும். அன்றைய தினம் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறந்தது.
ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி திதி கொடுப்பவர்களின் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைகிறார்கள் என்பதால் ஒருநாளாவது காவிரியில் நீராடி முன்னோர் கடன் செலுத்துவோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications