அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தீர.. சித்தர்கள் சொன்ன அபூர்வ பரிகாரம்..இதை செய்ய மறக்காதீங்க
மீன்களுக்கு உணவாக பொரி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொரியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
சென்னை: நாம் எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்ததற்காக இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம் என்பது நமக்கே தெரியாது. இருப்பினும் அந்த பாவத்தை எப்படி கழிப்பது? அறியாமல் செய்த பாவங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போக, நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகார முறைகள் உள்ளன.
நாம் எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்ததற்காக இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம் என்பது நமக்கே தெரியாது. இருப்பினும் அந்த பாவத்தை எப்படி கழிப்பது? அறியாமல் செய்த பாவங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போக, நாம் செய்யக்கூடிய சுலபமான பரிகார முறைகள் உள்ளன.
மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான், இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். எனவே நாம் நம்முடைய பாவங்கள் தீர சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

பாவ கணக்கு
சிலர் அறியாமல் பாவம் செய்வார்கள்..சிலர் நாம் செய்வது பாவம் என்று அறிந்தே செய்வார்கள். அதனால் அவர்களின் பாவக்கணக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தப்பு செய்தால் அதற்கு தண்டனை கண்டிப்பாக உண்டு. ஏதாவது ஒரு ரூபத்தில் நாம் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்பார்கள். சிலரோ மரணத்தை விட கடுமையான தண்டனையை கூட அனுபவிப்பார்கள். எனவே நம்முடைய பாவக்கணக்கு தீர நாம் சில பரிகாரங்களை செய்துதான் ஆக வேண்டும்.

தான தர்மங்கள்
ஏழைகள், உணவுக்காக ஏங்கும் பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், வாயில்லா ஜீவன்கள் என்று அடுத்தவர்களுடைய உதவியை மட்டும் எதிர்பார்த்து வாழும் உயிர்களுக்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ, உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கக்கூடிய இயலாதவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும். அன்னதானம் செய்வது நமது பாவத்தின் ஒரு பகுதியை நீங்கச் செய்யும்.

மீன்களுக்கு பொரி உணவு
ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொரிகளை உணவாக போடும் பழக்கத்தையும் நம்முடைய முன்னோர்கள் உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவிய பின்னர் பொரி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும், மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள்.

பாவங்களைப் போக்கும் சக்தி
மீன்களுக்கு பொரி போடுவதால் சிறு தோஷங்கள் நீங்கும். அதனால் தான் கோவில் குளங்களில் பொரி போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நாம் அறிந்து அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் போக்கும் சக்தி இந்த மீன்களுக்கு இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர்.

புறாக்களுக்கு உணவு
புறாக்களுக்கு உணவளிப்பது பூர்வ ஜென்ம சாபத்தை போக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. புறாக்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கோதுமை, தனியா போன்ற தானியங்களை இரையாக வைப்பது நமக்கு நிறைய புண்ணியங்களை சேர்க்கும். எனவே உங்கள் வீடு தேடி வரும் புறாக்களுக்கு மறக்காமல் உணவு கொடுங்கள்.

எந்த நாளில் தர்மம் செய்யலாம்
தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய நல்ல நாளாகும், அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை. பௌர்ணமி. ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள். ஞாயிற்றுக்கிழமை. தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .

சிவ வழிபாடு
தினமும் சிவ பெருமானுக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இது தெரியாமல் செய்த பாவத்திற்கான பரிகாரம்தான். தெரிந்தே பாவம் செய்தால் அதற்கான தண்டனையை சிறிதளவேனும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications