ஆடல்வல்லான் நடராஜரின் ஆருத்ரா தரிசனம்..தமிழ்நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் கோலாகலம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பல வகையான பழங்களால் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை, தஞ்சாவூர், குற்றாலம், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சிவ ஆலயங்களில் நடைபெற்ற மகா அபிஷேகத்தை விடிய விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு பொடி,பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது, முன்னதாக நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி வீதி உலா நடைபெற்று சுவாமி கோவிலுக்கு வந்தடைந்து பின்னர் அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நடராஜர் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வாய்ந்த மாா்கழி திருவாதிரைத் திருவிழா கடந்த 28ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5 ஆம் நாளன்று தேரோட்டமும், 8ஆம் நாளன்று சித்திரசபையில் அருள்மிகு நடராசப்பெருமானுக்கு பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவின் 10ஆம் நாளான இன்று மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையிலும், அதனை தொடர்ந்து குற்றாலநாத சுவாமி கோவில் திரிகூட மண்டபத்தில் 5 மணிக்கும் நடராசப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
கோவில் நகரம் என்று அழைக்கப்படக்கூடிய காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பெருமாள் மச்ச அவதாரத்தில் சிவனை வழிபட்டதாக வரலாறு. இத்தகைய புகழுக்குரிய இக்கோவிலில் ஆருத்ரா விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நள்ளிரவில் அங்குள்ள நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாகபல்வேறு கட்டுப்பாடுகளுடன் இவ்விழாவானது நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள்,23பழ வகைகள்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம்,தேன் மற்றும் மலர்கள் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு அபிஷேகமானது நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஆருத்ரா விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நடராஜரை வணங்கி வழிபட்டு சென்றனர்.
தூத்துக்குடியில் உள்ள மிகவும் பழமையான பிரசிதிபெற்ற ஆலயமான சிவன்கோவிலில் நள்ளிரவு 1.30மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவன்கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்,அபிஷேகம், மற்றும் பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்றது அதிகாலை 6.30மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள புகழ்பெற்ற திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புகழ்பெற்ற திருத்தளிநாதர் ஆலயத்தில் ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்பு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளி பால், திருமஞ்சனம், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் மூலவர் ஆடல்வல்லான் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு அங்கி மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது மாணிக்கவாசகர் 108 திருவாசகம் ஓதுவரால் பாடப்பட்டது. பின்பு அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அலங்காரம் நடைபெற்று பன்முக தீபாராதனை, சோடஷ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க வாசகருக்கும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு நடைபெற்றது. நான்கு ரோடு, தேரோடும் வீதி, மதுரை ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இவ்விழாவில் திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஆருத்ரா தரிசனம். சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாள் இது மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதை ஆருத்ரா தரிசனம் என்றழைக்கிறோம். இந்த புண்ணிய நாளில் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள நடராஜர் திருவுருவத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும் , ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார் சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்றிரவு சிவகாமி சமேத நடராஜப் பெருமானுக்கு திரவிய பொடி மாப்பொடி மஞ்சள் பொடி பால் தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து புனிதநீர் நிரம்பிய கடநீரை கொண்டு கட அபிஷேகமும் நடைபெற்ற பிறகு சிறப்பு அலங்காரத்தில் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications