Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் செம திட்டம்! கட்டணமே இல்லை.. அறுபடை வீடுகளுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் 207 பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 60 வயதை எட்டியவர்களை முருகனின் அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில் அழைத்துச் செல்லும் புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று 207 பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக சுற்றுலா செல்கின்றனர்.

முருகன் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு வயதான பக்தர்கள் ஒரே தடவையில் சென்று தரிசிக்க சிரமப்படுகின்றனர். இவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் கட்டணம் இல்லாமல் அரசு சார்பில் அழைத்து செல்ல தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.

Arupadai veedu Murugan Free spiritual tour started today: Minister sekar babu

முருகனின் அறுபடை வீடுகளுக்கான 6 கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 200 பேர் என ஆண்டுக்கு 5 முறை அழைத்து செல்லப்படுவர். வருடத்திற்கு 1,000 பக்தர்கள் என்ற கணக்கில் முதியவர்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த முயற்சி இந்து சமய அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டன. அதன்படி, விண்ணப்பித்த மூத்த குடிமக்களில், தகுதி உடைய 207 விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அதன்படி முதற்கட்டமாக அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் ஜனவரி 28ஆம் தேதியான இன்று தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “60 வயதுக்கு மேற்பட்டவர்களை முருகனின் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 207 பேர் முருகனின் அறுபடை வீடுகளுக்குச் செல்கின்றனர்.

அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா... தமிழக அரசு அதிரடி.. உற்சாகத்தில் முருக பக்தர்கள்

பக்தர்களின் பயண செலவை அரசு மானியத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. தனிநபராக அறுபடை வீடுகளுக்குச் சென்று வர ரூ.50,000 வரை செலவாகும். தமிழக அரசு ஒரு நபருக்கு 15,830 ரூபாய் செலவு செய்கிறது. இந்த பயணச் செலவினை அரசு மானியமாக ஏற்றுக்கொண்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+