For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய ஆசையா?.. செவ்வாய்கிழமையில் இந்த பரிகாரம் பண்ணுங்க..உடனடி பலன்

Google Oneindia Tamil News

சென்னை: செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். காரணம் இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும், சொந்த வீடு இருப்பவர்கள் இன்னொரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரம் செய்தால் கை மேல் பலன் கிடைத்துள்ளதாக வீடு கட்டியவர்கள் அனுபவப்பூர்வமாக கூறியுள்ளனர். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள் மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்

 செவ்வாய்கிழமை விரதம்

செவ்வாய்கிழமை விரதம்

தமிழ்நாட்டில் செவ்வாய் கிழமையில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை, பொருட்கள் வாங்குவதில்லை என்று வழக்கம் இருக்கிறது.உண்மையில் இந்தக் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

பல மடங்கு பெருகும்

பல மடங்கு பெருகும்

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும்.

செவ்வாய் பகவான் யார்

செவ்வாய் பகவான் யார்

பெருமாளின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். எனவே, செவ்வாயை ஒதுக்குவது பூமித்தாயைப் புறக்கணிப்பதாகும். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்கலனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர்.

 பூமித்தாய்க்கு நன்றி

பூமித்தாய்க்கு நன்றி

பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம். செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும். இந்நாளில் மங்கலப்பொருட்களை வாங்குவதும், சுபநிகழ்ச்சி நடத்துவதும் நம்மைச் சுமக்கும் பூமித்தாய்க்கு நாம் நன்றிக்கடன் செலுத்தலாம்.

 பரிகாரம் பலன் தரும்

பரிகாரம் பலன் தரும்

செவ்வாய்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். செவ்வாய்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் ஒன்பது வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நம்முடைய எல்லா வியாபாரமும் வெற்றியை தரும்.

 செவ்வாய்கிழமை விரதம்

செவ்வாய்கிழமை விரதம்

செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி.

 செவ்வாய் தோஷம் நீங்கும்

செவ்வாய் தோஷம் நீங்கும்

செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.

சொந்த வீடு யோகம்

சொந்த வீடு யோகம்

சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்களில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். சிலர் சொந்த ப்ளாட்கூட வாங்கியிருக்கின்றனர். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்குச் சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார். நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வந்து வணங்க செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.

5 ரூபாய் பரிகாரம்

5 ரூபாய் பரிகாரம்

வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் வீட்டு பூஜை அறையில் தினசரியும் விளக்கேற்றி வழிபடுங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து, எண்ணெயில் போட வேண்டும். அதன்பின் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து விளக்கிற்கு கீழே அடிப்பாகத்தில் வைக்க வேண்டும். அந்த நாணயத்தின் மீது விளக்கு வைக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதவர்கள் மட்டும் இது போல் செய்ய வேண்டும்.

Recommended Video

    Horoscope | இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 07, 2022
    விளக்கு ஏற்றி பரிகாரம்

    விளக்கு ஏற்றி பரிகாரம்

    ஏற்கனவே சொந்தமாக வீடுகட்டி இருப்பவர்கள் அடுத்த வீடு கட்டுவதற்கு இந்த பரிகாரத்தை செய்தால் சிறப்பான பலனை பெற முடியும். சொந்த வீடு இருக்கிறது மேலும் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பவர்கள், ஐந்து ரூபாய் நாணயத்தை அடிப்பாகத்தில் வைக்கத் தேவையில்லை. விளக்கு ஏற்ற இருக்கும் அந்த எண்ணெயில் போட வேண்டும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை 5 ரூபாய் நாணயத்தை விளக்கில் தொடர்ந்து வைத்து கொண்டே வாருங்கள். வீடு கட்டி முடிந்த உடன் அந்த 5 ரூபாய் நாணயத்தை கொண்டு போய் குல தெய்வ கோவில் உண்டியலில் செலுத்தி விடலாம்.

    English summary
    Mars is hailed by all as the auspicious. Auspicious day for hero Mars is Tuesday. Many people choose to fast on this holy day. If Lord Muruga is worshiped after fasting on Tuesdays, soon all the effects caused by Mars dosha will be gradually removed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X