வெள்ளிக்கிழமை இந்த காரியங்களை செய்யாதீர்கள்..மீளவே முடியாத கடன் பிரச்சினை வரும் - ஆன்மீக ரகசியங்கள்
சென்னை: வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். ஆனால் சில காரியங்களை கண்டிப்பாக பெண்கள் செய்யக்கூடாது. வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை காலி செய்து விட்டு சுத்தமாக வைத்துக்கொண்டாலே, செல்வம் செழிக்கும் கடன் பிரச்சனைகள் விலகும்.
காலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கிறது. இவர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
பெண்கள் செய்யும் சில தவறுகள் கடன் பிரச்சினையை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் கடன் பிரச்சினை தீரவும் செல்வ வளம் அதிகரிக்கவும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கவும்.

ஒட்டடை அடிக்காதீர்கள்
வீட்டில் ஒட்டடை அதிகம் சேர விடக்கூடாது அப்படி இருந்தாலும் வீட்டில் கடன் பிரச்சினை ஏற்படும்.
வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிப்பது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடிப்பது கூடவே கூடாது. வெள்ளிக்கிழமையில் பெண்கள் ஒட்டடை அடித்தால் மகாலட்சுமியை விரட்டி அடிப்பதற்கு சமம் எனவே வியாழக்கிழமைகளில் ஒட்டடை அடித்து வீடு துடைப்பது நல்லது.

துணி துவைக்காதீர்கள்
பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகள் வீட்டில் இருக்கக்கூடாது. இதனால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும். வியாழக்கிழமை அன்றே துணி துவைத்து விடுவது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் மறந்தும் துணி துவைக்காதீர்கள். வெள்ளிக்கிழமை அன்று எந்த ஒரு பொருளையும் சுத்தம் செய்வது கூடாது.

கடன் பிரச்சினை
வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். அதே நேரத்தில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது அது வறுமையை ஏற்படுத்தும் கடன் பிரச்சினையில் சிக்க வைத்து விடும். அதே போல ஆண்கள் முடி வெட்டவோ, முக சவரம் செய்யவோ கூடாது.

வெள்ளிக்கிழமை வாங்க வேண்டியவை
வெள்ளிக்கிழமையன்று கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி நிரப்பி வைக்கலாம். மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். கடன் சுமை குறையும். வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது சிறப்பு. தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.

பூஜை அறையில் இருக்க வேண்டியவை
பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண்தாமரை ஆகியவை செல்வத்தை அதிகரிக்கச் செய்பவை. இவை நம்முடைய வீட்டிலிருந்தால் ஐஸ்வர்யம் பெருகும். கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண்கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.

வெள்ளிக்கிழமை விரதம்
வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கும், குபேரனுக்கு உரிய மிக உன்னதமான நாள். வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் பெறலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications