திருப்பதி பிரம்மோற்சவம்..ஏழுமலையானுக்கு 5 டன் மலர்கள்..சேலம் பக்தர்களின் நெகிழ்ச்சி அனுபவங்கள்
சேலம்: திருப்பதியில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ள நிலையில் ஏழுமலையான் ஆலயத்தை அலங்கரிக்க 5 டன் மலர்கள் சேலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. தங்களால் திருமலைக்கு செல்ல முடியாவிட்டாலும் தங்களின் கைகளால் தொடுத்த மலர்கள் ஏழுமலையானை சென்றடைந்தது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்று பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து சிறப்பு விழாக்களுக்கும் சேலம் ஸ்ரீ பக்தி சாரர் பக்தி சபா சார்பில் வாசனை மலர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலைகளை அனுப்பி வைப்பது வழக்கம்.
திருமலை திருப்பதி புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 27ஆம் தேதி பிரம்மோற்சவம் வைபவம் தொடங்கி உள்ளது. வருகின்ற அக்டோபர் 5ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.

திருமலையில் குவியும் பக்தர்கள்
பிரம்மோற்சவத்தை காண நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருமலா திருப்பதிக்கு வருகை புரிந்து பெருமாளின் தரிசனம் செய்த பிறகு பிரம்மோற்சவ வைப்பவத்தில் கலந்து கொள்வார்கள்.

மலர் அலங்காரம்
இந்த பிரம்மோற்சவ வைபவத்தின் போது திருமலா திருப்பதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிப்பது சிறப்பு.
பிரம்மோற்சவ வைபோகத்திற்கு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

5 டன் மலர்கள்
பிரம்மோச்சவத்தை யொட்டி வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் கருட சேவைக்கு பூக்கள் அனுப்பி வைப்பதற்காக சேலம் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் ஏராளமான பெண்கள் பங்கேற்று செவந்தி, சாமந்தி, அரளி, துளசி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட வித விதமான வாசனை மலர்கள் 5 டன் எடை உள்ள பல்வேறு விதமான மலர்களை மாலையாக தொடுத்தனர்.

திருமலைக்கு பயணமான மலர்கள்
பின்னர் அந்த மாலைகள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு மாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தனி லாரி மூலம் திருப்தி திருமலைக்கு பாதுகாப்பாக இன்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பெண் பக்தர்கள் கூறும்போது, திருமலை திருப்தியில் நடைபெறும் வைபவத்திற்கு தாங்கள் தொடுக்கும் பூக்கள் அனுப்பப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாலை தொடுத்த பக்தர்கள் கூறினர்.

புண்ணியம் கிடைக்கும்
திருமலை வாசன் திருமாலுக்கு எங்கள் கைகளால் தொடுத்த மலர் மாலை சாத்தப்படுவது நினைக்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. திருமலைக்கு செல்ல முடியாத நிலையில் நாங்கள் தொடுத்த பூக்கள் செல்வதன் மூலம் திருமலைக்கு சென்று வந்த புண்ணியமும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்ட பாக்கிமும் கிடைத்தது போல எங்களுக்கு கிடைகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அன்னதானம்
இந்தப் பூக்கள் தொடுக்கும் நிகழ்ச்சியில் ஸ்ரீ பக்தி சாரார் பக்தி சபா சார்பில் பூக்களைத் தொடுக்க வந்த ஏராளமான பெண்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியினை சுந்தரி, சண்முகம், மணிசங்கர், குமார், மோகன், சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக செய்திருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications