Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறந்தவருக்கு மூக்கில் பஞ்சு வைப்பது ஏன்? இறந்தவர் வீட்டுக்கு சென்று வந்தால் குளிக்கணும் ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறந்தவர்களின் மூக்கில் பஞ்சு வைப்பது ஏன் தெரியுமா? கால்கள் சேர்த்து கட்டப்படுவது ஏன்? இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடனே குளிக்க வேண்டும் என்பார்கள்.. குளிக்காமல் வீட்டிலுள்ள எந்த பொருளையும் தொடக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

இறந்தவர்களின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு வரும்போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், புராணங்களில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளன.. அதில் ஒன்றுதான் இறந்தவரின் மூக்கில் பஞ்சு வைப்பதும், காது, வாயை சேர்த்து கட்டுவதும்.

spirituality cotton

பாக்டீரியாக்கள்: இதற்கு காரணம், ஒருவர் இறந்ததுமே, அவரது உடலில் பாக்டீரியாக்கள் அதிகம் வகிக்க துவங்கிவிடும்.. எனவே, அவர்களின் உடலிலிருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும்... இதனால் சுற்றுசூழல் மோசமாக பாதிக்கப்படும்... நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கவே மூக்கில் பஞ்சு வைக்கப்படுகிறது.


அதுமட்டுமல்ல, ஒருவர் இறந்த பிறகு, அவரது காதுகள் மற்றும் மூக்கில் இருந்து ஒரு சிறப்பு திரவம் வெளியேறுகிறது. இந்த திரவத்தின் ஓட்டத்தை நிறுத்தவும், இதுபோன்ற நுண்ணுயிர்கள் பரவாமல் தடுப்பதற்காகத்தான், நாடிகட்டு என்ற பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மூக்கு மற்றும் காதுகளின் துளைகளை பஞ்சு வைத்து மூடுவதால், எந்த வகையான பாக்டீரியாவும் உடலில் நுழைய முடியாது.

7 கட்டுகள்: அதிலும் நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால், காற்று உட்புகுந்து உடலை மேலும் கெட்டுவிடாமல் இருப்பதற்காகவே, கால் கட்டைவிரல்களை சேர்த்து கட்டுவார்கள். உடலில் இப்படி 7 இடங்களில் கட்டுவார்கள்.

இறுதி சடங்குகளையும் பகலிலேயே செய்துவிடுவார்கள்.. இதற்கு அறிவியல் காரணம் என்று பார்த்தோமானால், இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், இது பிறரை எளிதில் தாக்கக்கூடும் என்பதால் பகலில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

உடல் தகனம்: ஆன்மீக ரீதியாக பார்த்தால், இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகமாக நடமாடக்கூடிய நேரமாகும்.. இறந்த எதிர்மறை சக்திகளும், பிறரது உடல்களில் நுழைய முயலும்... எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே, பகலிலேயே இறந்தவர்களை தகனம் செய்துவிடுகிறார்கள்.

விஷக்கிருமிகள்:
அதேபோல, சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேற்றிவிடும் என்பதால்தான், சடலத்தை தொடக்கூடாது என்பார்கள். அப்படி நெருங்கி தொடும்போது, விஷ உயிர்கள் நம் மீதும் படர வாய்ப்புள்ளது.. நம்மிலிருந்து குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

அதனால்தான், இறந்தவர் வீட்டுக்கு சென்று வந்ததுமே குளிக்க வேண்டும் என்கிறார்கள். நெருக்கமான உறவை இழந்து தவிக்கும் சூழலில், இப்படி குளிர்ந்த நீரில் குளிக்கும்போது, உடலில் மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

விளக்குகள்: அதேபோலதான், இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கிய சடங்காகவே கடைப்பிடிக்கப்படுகிறது.. அவர்கள் உயிர் அலைகள், அந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வரக்கூடும்.. இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்களுக்கு பல துன்பங்கள் நேரிடலாம். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. எனவே, இந்த விளக்கினை தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும்.. காரணம், இதுதான் எமனுக்கான திசையாகும்.

எனவே, ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும்.. ஏனென்றால், ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பிறகு ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும்.. இதற்காகவே, விளக்குகளில் ஒற்றை திரி பயன்படுத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+