இந்த 3 பானையும் பூஜை ரூமில் இருந்தாலே வறுமை நீங்குமே.. குபேர பூஜை வழிபாட்டின் சூப்பர் பலனை பாருங்க
சென்னை: குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்க வேண்டுமானால், குபேரனுக்கு எந்தெந்த முறையில் வழிபாடுகள் செய்யலாம்? குபேர பானையை வீட்டில் வைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும்.. குபேர பானை என்றால் என்ன? இதற்கு பூஜைகளை எப்போது செய்ய வேண்டும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? பணவரவை அதிகப்படுத்த குபேர பானைகள் எப்படி உதவுகின்றன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
குடும்பத்திலுள்ள வறுமை நீங்க, பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கு மற்றும் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்க வியாழனில் குபேர வழிபாடு செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பார்கள்.

குபேரன் திசை
அதேபோல, பணப்பெட்டியை வைத்திருக்கும் திசை குபேரனுக்கு உகந்த முறையில் வாஸ்துபடி வைக்க வேண்டும்.. பிறகு வடக்கு திசையில் எப்பொழுதும் ஒரு சிறிய மண் பானையில் சில்லரை நாணயங்களை போட்டுபோட்டு வைக்கலாம்..
அதேபோல வீட்டின் வரவேற்பறையில், ஒரு கண்ணாடி ஜாடியில் ஏலக்காய்களை போட்டு திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.. இந்த ஏலக்காய் வாசம், வீடெல்லாம் பரவி, செல்வத்தை உண்டுபண்ணும்..
அல்லது காமாட்சி அம்மன் விளக்கிற்கு அடியில் 5 ரூபாய் நாணயத்தை வைத்து விளக்கேற்றி வந்தால், பணவரவு வீட்டிற்குள் தங்குதடையின்றி நடக்கும்.. அரிசி பானையில் 1 ரூபாய் நாணயங்களை போட்டு வைக்கலாம்.. . கல் உப்பு ஜாடியில் 5 ரூபாய் நாணயங்களை போட்டு வைக்கலாம்.
குபேர பானை வழிபாடு
இதில் குபேர பானை வழிபாட்டினையும் தவறாமல் செய்ய வேண்டும்.. குபேர பானை என்பது பானைகளால் செய்யப்பட்ட கலசமாகும்.. அதாவது, மண் பானையால் 3 அடுக்குகளை கொண்டிருக்கும்.. அற்புதமான கலை வேலைப்பாடுகளுடன் கடைகளில் இந்த பானைகள் விற்கப்படுகின்றன.. அதிக விலை என்று நினைத்தால், சிறிய மண்பானைகளை வாங்கி வந்து நாமே அலங்கரித்து கொள்ளலாம்.
எப்போதுமே ஒற்றைப்படை இலக்கத்தில் அதாவது 3 அல்லது 5 ஆகிய எண்ணிக்கைகளில்தான் குபேர பானைகளை பூஜையறையில் அடுக்கி வைக்க வேண்டும். பெரிய பானை அடியிலும், அதைவிட சிறிய பானை அதற்கு மேலும், அதைவிட சிறிய பானை அதற்கு மேலும் அடுக்கி பூஜையறையில் வைக்க வேண்டும்.
இதற்கு கலச பானைக்கு மஞ்சள், குங்குமம் இடவேண்டும்.. தினம்தோறும் பூஜைகள் செய்யும்போது கலசத்துக்கும் தூபம் காட்ட வேண்டும்..
கல் உப்பு ஜாடி
குபேரனின் அருளும் மகாலக்ஷ்மியின் அருளும் கிடைக்க வேண்டுமானால், குபேர பானைக்கும் பூஜைகளை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதால், வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் என்பார்கள்.. அதிலும் உணவு பொருட்களை கலசத்தில் இட்டு பூஜிக்கும்போது, வீட்டில் உணவுக்கு கஷ்டம் வராது.. இதனால் அன்னபூரணியின் அருளும் முழுமையாக கிடைக்கும்.
குபேரனுக்குரிய வியாழக்கிழமைகளில், குபேரனுக்குரிய வடக்கு திசையில் வைத்து இந்த குபேர பானைக்கும் பூஜை செய்ய வேண்டும்.. இதற்கு முதல் பானையில் அரிசி, 2வது பானையில் துவரம் பருப்பு, 3 வது பானையில் கல் உப்பு என மகாலட்சுமிக்கு பிடித்த தானியங்களை நிரப்பி வைக்கலாம்.. அல்லது நாணயங்களையும் நிரப்பி வைக்கலாம்.
அரிசி பருப்பு நாணயங்கள்
3வது பானையில் நாணயங்களை போடுவதாக இருந்தால், அதனுடன் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, 1 ரூபாய் நாணயம் போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.. எப்போதுமே இந்த பானைகள், பூஜை அறையின் வடக்கு திசையில் கிழக்கு பார்த்தபடி இருப்பது நல்லது.
அதேபோல, பவுர்ணமி தினத்தன்றும் அரிசி, பருப்பு, உப்பு, நாணயங்களை மாற்றி புதிதாக நிரப்பி வைத்து பூஜிக்கலாம்..
இந்த தானியங்களை வாரம் 2 முறை அதாவது விரத தினம் அல்லது நல்ல நாள் பார்த்து மாற்றிக் கொள்ளலாம். அப்படி பானைகளிலுள்ள தானியங்களை மாற்றும்போது, பழைய அரிசி, பருப்புகளை பறவைகளுக்கு தீனியாக போடலாம்.. நாணயங்களை உண்டியலில் சேர்த்துவிடலாம்.












Click it and Unblock the Notifications