உங்கள் கஷ்டங்கள் நீங்க இந்த ஒரு மரம் போதும்..கண் திருஷ்டியும் மாயமாகும்..இப்படி செய்ய மறக்காதீங்க
சென்னை: கண் திருஷ்டி ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தும். சிலரது வாழ்க்கையில் தொழில் நஷ்டம் ஏற்படும். கண் திருஷ்டி தாக்காமல் இருக்க சில பொருட்களை நம்முடைய வீட்டில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒரே ஒரு மரம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நம்முடைய வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வாழையடி வாழையாக குடும்பம் செழிக்க நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அது என்ன பரிகாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
திருமண வீடு என்றாலும் எந்த ஒரு சுப நிகழ்ச்சி என்றாலும் முதலில் வீட்டின் முன்பாக வாழை மரம் கட்டி வைப்பார்கள். வாழை குலையுடன் இருக்கும் அந்த மரம் அனைத்து கண் திருஷ்டிகளையும் போக்கும் என்பதனால்தான் நம்முடைய முன்னோர்கள் வாழை மரத்தை கட்டி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அதே போல வாழையடி வாழையாக வம்சம் தழைத்து ஓங்க வேண்டும் என்பதற்காகவும் திருமண வீட்டின் முன்பாக வாழை மரத்தை கட்டி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். வாழை மரம் வளர்க்கும் வீடுகளில் கண் திருஷ்டி தாக்க வாய்ப்பு இல்லை.

வாழை பூக்கள் பரிகாரம்
பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட திடீரென வறுமையில் தள்ளப்படுவார்கள். வறுமை நீங்கவுட் கடன் பிரச்சினை நீங்கவும் வாழை பூக்கள் வைத்து சில பரிகாரங்கள் செய்யலாம். இந்த பரிகாரத்தை அமாவாசை திதியிலோ அல்லது தேய்பிறை அஷ்டமி திதியிலோதான் செய்ய வேண்டும். மூன்று வாழை பூக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் சூரியன் மறையும் நேரத்திலோ மாலை நேரத்திலோ கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி வாழை பூக்களை தடவ வேண்டும். ஆணாக இருந்தால் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் வறுமை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

பித்ரு தோஷம் நீக்கும் வாழைக்காய்
100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயிலும் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை நாளில் கடலில் விட வேண்டும். இதன் மூலம் பித்ரு தோஷம் விலகும்.

வாழை மரத்தின் தண்ணீர்
ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் வறுமைகள் விலகும். வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது.

தங்க நகை பெருக
சம்பள பணத்தையோ அல்லது சுப காரியத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது. அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் நம்முடைய தங்கமும், செல்வமும் பல்கி பெருகும்.

திருமண தடைகள் நீங்கும்
இன்றைக்கு பலரும் திருமணம் நடைபெறுவது சிரமமாக உள்ளது. திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்டி விட வேண்டும். மூன்று சஷ்டி திதிகளில் இது போல செய்துவந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்,

குழந்தை பாக்கியம் தரும் வாழைப்பழம்
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதைப்பகுதியை கரண்டியால் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் சாப்பிட்ட பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை பசுவிற்கு சாப்பிட கொடுத்தால் அவர்களுக்கு சுக பிரசவம் நிகழும் என்பது நம்பிக்கை.

வியாபார வளர்ச்சி
பௌர்ணமி நாளில் சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகை போட்டு வந்தால் வியாபாரம் வளர்ச்சி அடையும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications