சனிக்கிழமைகளில் கிச்சடி சாப்பிடுவது மிகவும் விசேஷம் ஏன் தெரியுமா?
சென்னை: சனிக்கிழமைகளில் கிச்சடி சாப்பிடுவது சனிபகவானுக்கு உகந்தது என ஆன்மீக ரீதியில் கூறப்பட்டுள்ளது. இந்த கிச்சடி மிகவும் எளிய முறையில் செய்யப்படுவது. ஆனால் இதை சனிக்கிழமைகளில் செய்தால் அத்தனை விசேஷம் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பாரம்பரியமாக சனிக்கிழமைகளில் கிச்சடி சாப்பிடுவது என்ற நம்பிக்கை வேரூன்றியுள்ளது. அரிசி, பருப்பில் தயாரிக்கப்படும் இந்த எளிமையான கிச்சடியில் சத்தும் ஆன்மீகமும் கலந்து உள்ளது.

நமது சனாதன தர்மத்திலும் கிச்சடிக்கு முக்கியத்துவம் உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் கிச்சடி சாப்பிடும் நடைமுறை பண்டைய மரபுகள் மற்றும் நம்பிக்கைகளில் வேரூன்றியுள்ளது. இது உணவின் ஆன்மீக, ஜோதிட ரீதியில் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
சனிக்கிழமைகளில் கிச்சடி செய்தால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம். சனிக்கிழமை என்பது சனி கிரகத்துடன் தொடர்புள்ளது. ஏழரை சனி, அஷ்டமத்து சனி இருந்தால் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுமாறு ஜோதிடர்கள் கூறுவார்கள்.
சனி என்பவர் நமக்கு நீதிபதி போல் செயல்படுகிறார். நாம் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனையையும் செல்வ செழிப்பையும் கொடுப்பார் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் சனியின் தாக்கத்தை குறைக்க அவருடைய ஆசி தேவைப்படுகிறது. இதனால் சனிக்கிழமைகளில் கிச்சடியை தானமாக வழங்குவதும் உட்கொள்வதும் சனி பகவானை சாந்தப்படுத்தும் ஒரு யுக்தி என்கிறார்கள்.
சனி கிரகம் மிகவும் மெதுவாக சுற்றும் கிரகம் என கருதப்படுகிறது. எனவே எளிதில் ஜீரணமாகக் கூடிய கிச்சடியை சாப்பிடுவது சனி பகவானின் பாதக விளைவுகளில் இருந்தது சமப்படுத்த உதவுகிறது என்கிறார்கள். கிச்சடியில் சேர்க்கப்படுவது உளுந்தும் அரிசியும்தான். இந்த பொருட்களை உட்கொள்வது சனியின் நேர்மறையான செல்வாக்கை வலுப்படுத்துவதோடு அதன் எதிர்மறை தாக்கங்களைக் குறைக்கும்.
அது போல் கிச்சடி சாப்பிடுவது உடலையும் மனதையும் சுத்தப்படுத்தும். அத்துடன் உளுந்தானது சன பகவானுக்கு உகந்தது என்பதாலும் கிச்சடி சாப்பிடலாம் என்கிறார்கள். மேலும் சனிக்கிழமைகளில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இல்லாவிட்டால் அந்த பாலில் சிறிது மஞ்சள் அல்லது வெல்லம் சேர்க்க வேண்டும். அது போல் ராகு, கேதுவின் தீய விளைவுகளை நீக்க 2 துளசி இலைகளை சாப்பிடுவதும் பயனளிக்குமாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications