படுக்கை அறையில் இதை பாலோ பண்ணுங்க!..நிம்மதியான தூக்கத்தை என்ஜாய் பண்ணுங்க!!
சென்னை: வேலைக்காக பகல் எல்லாம் அலைந்து திரிந்து விட்டு இரவில் நம்வீட்டிற்கு வந்தால் மன நிம்மதி இருக்க வேண்டும். படுக்கை அறையில் கண் மூடி உறங்கினால் கெட்ட கனவுகள் எதுவும் இன்றி நிம்மதியான உறக்கம் வர வேண்டும். அப்படி இருந்தால்தான் மறுநாள் கண் விழித்து சுறுசுறுப்பாக இயங்க முடியும். நம்முடைய படுக்கை அறையில் என்னென்ன பொருட்களை வைக்கலாம். என்னென்ன பொருட்களை வைக்கக் கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வீட்டிற்கு வந்தாலே நிம்மதியில்லை என்று புலம்புவார்கள். வீடே போர்களமாக உள்ளது படுக்கை அறையே பலி பீடமாக உள்ளது என்று உறங்கவே அஞ்சுவார்கள். சிலரது வீட்டில் படுக்கை அறை எப்படி இருக்கிறது என்று பார்த்தலே போதும் அவர்களின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று சொல்லி விடலாம்.
படுக்கை அறை சரியில்லாமல் இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும் பண இழப்பும் வருமாம். படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு அல்லது கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நல்ல மக்களாகவும் இருப்பார்கள். தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும்.

படுக்கை அறை திசை
வீட்டில் உள்ள மாஸ்டர் படுக்கையறையின் திசை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் படுக்கையறை மேற்கு நோக்கி இருக்க வேண்டும். விருந்தினர் படுக்கையறை கிழக்கு நோக்கியதாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு ஸ்டடி ரூம் தென்கிழக்கு திசையை எதிர்கொண்டு இருக்க வேண்டும்.

படுக்கை
படுக்கையை மூலையில் அமைக்கக் கூடாது. கட்டிலின் 3 புறமும் நடக்கும் வகையிலும் தெற்கு புறம் குறைந்த காலியிடம் விட்டும் படுக்கையை அமைக்க வேண்டும். பால்கனிக்கு கதவு அவசியம் இருக்க வேண்டும்.
கட்டிலை இப்போதெல்லாம், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை கொண்டு செய்கிறோம். இவையெல்லாம் கட்டிலுக்கான சரியான பொருட்கள் அல்ல.

கட்டிலுக்கு ஏற்ற மரங்கள்
கட்டிலுக்கு ஏற்றதாக சந்தனமரம், தேக்கு, பூவரசு, மருது, கருங்காலி, மூங்கில், கோரை, தர்ப்பை போன்றவற்றால் மட்டுமே செய்தால் நல்லதென வாஸ்து சாஸ்திரம். கட்டில் தலைப்பகுதி சற்றே உயரம் வைத்தும், அப்பகுதிப் பலகை வட்டமாகவோ, செவ்வகமாகவோ, சதுரமாகவோ வேலைப்பாடுகளுடன் இருப்பது நல்லது. பலாமரம், மாமரம், வேம்பு, தேக்கு மரக்கட்டிலை உபயோகப்படுத்தினால் நல்ல உறக்கம் வரும். புத்துணர்ச்சியுடன் கண் விழிக்கலாம். மாம்பலகை கட்டில் குளிர்ச்சியையும், அமைதியையும், பலாமரப் பலகை ஆழ்ந்த நித்திரை அளிக்கும். வேப்பம் பலகை சூடு தணித்து மூல நோய், வெட்கை, அல்சர் எனப்படும் வயிற்று புண்களைக் குணப்படுத்தும்.

சண்டை சச்சரவு வரும்
படுக்கைக்கு இந்த மரங்களை மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் கேட்கலாம். மற்ற பொருட்களைப் படுக்கையாக்கி உபயோகிக்கும்போது எதிர்விளைவுகள் ஏற்பட்டு நோய்வாய்ப் படுதல், தீவிரவாத குணமுடைய குழந்தைகள் உருவாவது, சண்டை சச்சரவுகள் அடிக்கடி வருவது போன்றவை நிகழும் என்றும் வாஸ்து நிபுணர்கள். ஊஞ்சல் போல கட்டில் செய்து படுப்பதும் இந்நாளிலும் பல வீடுகளிலும் உண்டு. எரிந்து போன மரம், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட மரம், ஏலத்தில் எடுத்த மரம், புயலால் சாய்ந்த மரம் ஆகியவற்றை உபயோகப்படுத்தக் கூடாது இதனால் வெறுப்பு, சஞ்சலம், கொலை வெறி, குடும்பத்தில் ஒற்றுமையின்மை ஆகிய கெடுபலன்கள் உபயோகிப்பவர்களை வந்து சேரும்.

மெத்தை எப்படி இருக்க வேண்டும்
மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்று சொல்வார்கள். நிம்மதியாக உறங்கி விழித்து எழுவதற்கு
கட்டிலுக்கு மெத்தை வாங்கப் போகும் போது முதல் தேர்வாக இலவம் பஞ்சு மெத்தைகளை வாங்கலாம் என்று வாஸ்து கூறுகிறது. வாழை நார், சிறிது தேங்காய் நார் உபயோகப்படுத்தலாம் என மென்மையான பருத்தியை உபயோகப்படுத்துவது நலம் என்றுரைக்கிறது.

நீர்நிலைகள் தெரியும் படுக்கை அறைகள்
படுக்கை அறையில் இருந்து பார்த்தால் நீர்நிலை தெரியக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ரிசார்ட் எனப்படும் பொழுதுபோக்கு இடங்களில் ரிவர் வியூ, பால்ஸ் வியூ, டேம் வியூ, நீர்த்தேக்க பார்வை, கடல் காட்சி என ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் பாதிப்பை அடைவார்கள். சில நாள்கள் தங்குவதில் தவறில்லை. குடும்பம் நடத்த ஏதுவானவையாக நீர்நிலை ஒட்டிய பகுதிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்டாயம் எனில் ஒரு பால்கனியை அமைத்து பூஞ்செடிகள், சிம், கண்ணாடி அமைத்து பரிகாரம் செய்யலாம்.

அலங்கார பொருட்கள்
புதிதாக திருமணமான தம்பதியர் அறையில் சிவப்பு அல்லது வெள்ளை நிற அலங்காரப் பொருட்கள் வைக்க அன்யோன்யம் பெருகும். கதவை நோக்கி கால்கள் இருக்கக் கூடாது. இதனால் நல்ல சக்தி கால்வழியாக வெளியேறி கதவு வழியே சென்று விடுவதால் சோம்பல் அதிகரிக்கும். பரிகாரமாக ஓசை எழுப்பும் மணியை தொங்க விட்டு அவ்வப்போது எழும் ஓசையால் குறைபாடு நீங்கப் பெறலாம்.

ஜன்னல்
கதவுகள் திறக்கும் போது சப்தங்கள் வரக்கூடாது. படுக்கையை ஒட்டி ஜன்னல் கூடாது. படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு / கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நல்ல மக்களாகவும் இருப்பார்கள். தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும்.

நோய் பாதிப்பு ஏற்படும்
தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும். படுக்கை அறையின் ஜன்னல் திறந்தால் உயர்ந்த மரம், கம்பம், மின்மாற்றி டிரான்ஸ்ஃபார்மர் தெரியக்கூடாது. இதனால் வழக்கு, வியாஜ்ஜியம், விவாதங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க கூடாது. இதனால் செல்வ இழப்பும், நோய்களும் எளிதில் வரக்கூடும். அவ்வப்போது திறந்து மூடும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும்.

படுக்கை அறை வெளிச்சம்
படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும். பொருளற்ற ஓவியம், படங்கள், மிருகங்கள் மோதிக்கொள்ளும் திரைச்சீலைகள் குடும்பத்தில் அமைதியை கெடுத்து விடும்.

படுக்கை அறை ஓவியங்கள்
விவாகரத்தான பெரும்பாலான தம்பதிகள் அறை பெரும்பாலும் விரக்தி தரும் அமைப்புகளான சுவரில் கத்தி, சண்டையிடும் போர்வீரன், ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்கள் என்றும் இப்படி பல ஏற்றுக்கொள்ள இயலாத பொருட்கள் இடம் பெற்றிருப்பதே காரணமாகும். காதலை / அன்பை தூண்டும் ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது நல்லது. ஜோடியான ஓநாய்கள், பீனிக்ஸ் பறவைகள், டிராகன், மீன்கள், இரட்டை வாத்துக்கள், ஹம்மிங் பறவைகள் ஒற்றுமை, வலிமையை குறிக்கின்றன.

கெட்ட கனவுகள் வராமல் தடுக்க
பேய் பிசாசு துரத்துவது, அடிபடுவது போன்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை பாழ்படுத்தி விடும். இதை தவிர்க்க சிறிய பீங்கான் கிண்ணத்தில் கடல் உப்பை வைத்திருந்தால் கெட்ட கனவுகள் வெகுவாக குறையும். தலைக்கு அருகில் கண்ணாடி சிலைகளையோ, அல்லி, தாமரைகளை வைத்து வந்தால் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். குழந்தைகள் படம், சந்தான கோபாலன் படம் ஆகியவை குடும்ப உறவை வலுப்படுத்தும் அலங்காரங்களாகும். படத்தை தூசி இன்றி துடைத்து வைப்பது அவசியம்.

நேர்மறை ஆற்றலை அதிகரிக்க
படுக்கை அறையில் குளியலறையின் கதவு மூடப்பட்டிக்க வேண்டும். ஏனெனில் திறந்த குளியலறையின் கதவு படுக்கையறையில் நேர்மறை ஆற்றலை குறைத்து எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே குளியறை கதவுகள் மூடியே இருக்க வேண்டும். குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது, தண்ணீரில் கல் உப்பைக் கொண்டு தரையைத் துடைக்கவும், அது எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்க படுக்கைக்கு அடியில் குப்பைப் பொருட்களை வைப்பதைத் தவிர்ப்பது முக்கியம்.












Click it and Unblock the Notifications