ரோஸ்மேரியின் பெஸ்ட் நன்மை.. வீட்டிற்குள் பாசிட்டிவ் கொண்டுவரும் வாஸ்து செடி.. வாவ் ரோஸ்மேரி
சென்னை: ரோஸ்மேரியின் பயன்கள் அபாரம்.. கவனம் சிதறாத கூர்நோக்கும் திறன், மனத்தெளிவு போன்றவற்றை பெருக்க செய்து, மூளையின் அறிவாற்றலை உயர்த்த இந்த ரோஸ்மேரி உதவுகிறது.. ரோஸ்மேரி இலைகள் அஜீரணம், நினைவாற்றல், தோல் மற்றும் முடி பராமரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.. அதேசமயம், வாஸ்துவிலும் முக்கிய இடத்தை ரோஸ்மேரி பெற்றுள்ளது.. அந்தவகையில், ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த ரோஸ்மேரி, பித்தத்தின் உற்பத்தியை குறைக்க செய்கிறது.. ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளதால், உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது..

ரோஸ்மேரியின் நன்மைகள்
உடல் வீக்கத்தை குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.. அஜீரண பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. இதிலுள்ள சேர்மங்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை பெற்றிருப்பதால், கீல்வாதம் மற்றும் பிற அழற்சி நோய்களில் இருந்தும் நம்மை காக்க செய்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் செடிகளுக்கும் மரங்களுக்கும் முக்கிய பங்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.. அதில் இந்த ரோஸ்மேரிக்கும் இடமுள்ளது.. அந்தவகையில், இது ஒரு வாஸ்து மூலிகையாகும்.. ரோஸ்மேரியை வீட்டில் வளர்ப்பதால, நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது.
மன ரீதியான பிரச்சனைகள்
தவிர, உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகளை நீக்க இந்த செடி உதவுவதால், வீடுகளில் வளர்ப்பது நல்லது.. ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை தெற்கு திசையில் நடக்கூடாது என்பார்கள். தெற்கு திசையில் நட்டு வைத்தால், வீட்டிற்குள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. எனவே, ரோஸ்மேரி செடியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது நல்லது.
எப்போதுமே, ரோஸ்மேரியை வீட்டில் வைக்கும் போது, சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவும். குறிப்பாக, வடிகட்டிய மண்ணில் வைக்க வேண்டும்.. அடிக்கடிதண்ணீர் ஊற்றக்கூடாது.. மண் காய்ந்த பிறகு, மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பாசிடிவ் வைப்ரேஷன்
ரோஸ்மேரியை போன்றே, துளசி, மல்லிகை, துளசி, பவள மல்லி, வாடாமல்லி, கற்றாழை போன்ற செடிகளை வளர்த்தால் அதிர்ஷ்டம் வருவதாக நம்பப்படுகிறது.. இதில், துளசி செடியானது, வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியதாகும்.. வெற்றிலை கொடி அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒரு தாவரமாக இருக்கிறது.
ஆனால், எளிதில் திரவத்தை வெளியிடும் செடிகளையும் வளர்க்க கூடாது.. வீட்டின் வாசலையே மறைக்கக்கூடிய பெரிய மரங்களை வளர்க்கக்கூடாது, இது நேர்மறை எண்ணங்கள் உள்நுழைவதை தடுத்துவிடலாம். அதேசமயம் வாஸ்துவுக்கு வளர்க்கப்படும் செடிகள் வாடிவிடக்கூடாது.. கருகிப்போன இலைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications