வீட்டிற்குள் சுபிட்சம் வர வேண்டுமா... இந்த விசயங்களை செய்தால் தெய்வம் வீட்டிற்குள் குடியேறும்
பூஜை அறையில் நாம் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்கள் கூட வீட்டில் சுபிட்சமும் தெய்வ அருளும் நிலைத்திருக்க காரணமாக அமையும். தினமும் விளக்கேற்றும் வீடுகளில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சென்னை: நாம் குடியிருக்கும் வீடு இறை அருள் நிறைந்ததாக இருக்க வேண்டும். தெய்வ அருள் நிறைந்த வீட்டிற்குள் துஷ்ட சக்தி எட்டிக்கூட பார்க்காது. நம்முடைய பூஜை அறையில் நாம் வைத்திருக்கும் சில பொருட்கள் தெய்வ சக்தியை நம்முடைய வீட்டிற்குள் ஈர்க்கும். தெய்வ அருள் நிறைந்த வீட்டில் செல்வமும் சுபிட்சமும் நிறைந்திருந்திருக்கும் மகிழ்ச்சி தாண்டவமாடும். உங்கள் வீட்டிற்குள் தெய்வம் குடியேற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
பூஜை அறையில் நீங்கள் விதவிதமாக எத்தனை விளக்குகளை வைத்திருந்தாலும், அகல் விளக்கிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. எனவே பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது அகல் விளக்கு ஒன்றையாவது ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
பூஜை அறையில் தெய்வீக சக்தி பெருக பூஜை செய்யும் பொழுது அங்கு பன்னீர் வைத்திருப்பது நல்லது. அது போல அத்தர், ஜவ்வாது போன்ற வாசனை மிக்க பொருட்கள் தெய்வீக ஆற்றலை வீட்டிற்குள் ஈர்க்கும். பூஜை செய்யும் போது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.

நைவேத்தியம் அவசியம்
தண்ணீர் இல்லாமல் பூஜை நிறைவு பெறாது. பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது அவசியம். அதே போல நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை கட்டாயம் வைத்து தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். கல்கண்டு, சர்க்கரை வைத்தாவது பூஜை செய்ய வேண்டும்.

கண்ணாடி
பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருள் கண்ணாடி உங்களுடைய பித்ருக்கள் பூஜை அறையில் இருக்கும் கண்ணாடி வழியே தங்களுடைய முகத்தை பிரதிபலித்து விட்டு செல்வதாக சாஸ்திரம் கூறுகிறது. பித்ருக்கள் மட்டுமல்லாமல் குலதெய்வத்தினுடைய பிம்பமும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும். எனவே கட்டாயம் கண்ணாடியை பூஜை செய்யும் போது வைத்துக் கொள்ளுங்கள்.

என்ன சாமி படம் வைக்கலாம்
அது போல் நீங்கள் விதவிதமாக எத்தனை சுவாமி படங்களை வைத்து இருந்தாலும் குலதெய்வத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. உங்களுடைய குல தெய்வம் என்னவென்று அறிந்து, அவருக்குரிய படங்களை வைத்து பூஜை செய்வது இன்னும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்கும். பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்களில் முக்கியமான படம் கோமாதா. பசு மாட்டை வணங்கும் பொழுது நமக்கு மற்ற அத்தனை தேவர்களும், தெய்வங்களும் சேர்ந்து ஆசீர்வாதம் செய்யும் பலன்கள் கிடைக்கும். எனவே கோமாதா படத்தை கட்டாயம் வைத்து வழிபாடு செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல ஒரு சுபீட்சம் பெருகும்.

வீட்டில் வைக்கக்கூடாத தெய்வப் படங்கள்
நம்முடைய பூஜை அறையில் சனிபகவான் உருவ படங்களை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. அதே போல நவகிரங்களின் உருவப்படங்களை வைத்து பூஜை செய்யக்கூடாது. கடவுள் படங்களில் உக்கிரமாகவோ அல்லது சன்னியாசி கோலத்தில் இருந்தால் வீட்டில் வைக்கக் கூடாது. முருகப்பெருமான் சன்னியாசி கோலத்தில் இருந்தால் மற்றும் தலைக்கு மேல் வேல் இருந்தால் அந்த உருவப்படங்களை வீட்டில் வைத்து வழிபட கூடாது. அகோரமாக இருகின்ற காளியம்மன் துர்க்கை மற்றும் சிவனின் ருத்ரதாண்டவ புகைப்படம் போன்றவை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட கூடாது.

செல்வ செழிப்பு அதிஅதிகரிக்கும்
சாந்த குணம் நிறைந்த கடவுளின் திருவுருவப்படத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் மன அமைதி மற்றும் குடும்ப ஒற்றுமையுடன் செல்வ செழிப்பை கொடுக்கும். அகோர மூர்த்தியாக விளங்கக்கூடிய காலபைரவர் உருவப் படங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் வீடு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் தினமும் ஏதாவது ஒன்றை நைய்வேதியமாக வைக்க வேண்டும் இப்படி இருந்தால் வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது.

இறை சக்தி வீட்டில் நிறைய இதை செய்யுங்கள்
நம் வீட்டில் தெய்வ சக்திகள் இருந்தாலே நல்ல விதமான எண்ண அலைகள் நமக்கு கிடைக்கும். தெய்வ சக்தியானது வீட்டிற்குள் இருந்தால் செல்வமும் மகிழ்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். துஷ்ட சக்திகளை வீட்டிற்கு அண்டவிடாது. வீட்டில் பறவைகள், விலங்குகள் இருந்தால் நல்ல எண்ணங்கள் அதிகரிக்கும் மேலும் இந்த விலங்குகளுக்கு தெய்வசக்தி அறியும் ஆற்றல் இருக்கிறது. நம் வீட்டில் கட்டப்படும் பறவைகளின் கூண்டுகளை கலைக்கக் கூடாது காரணம் என்னவென்றால் அது தெய்வ சக்தியை கொண்டு கட்டப்பட்டவை ஆகும் மேலும் இவற்றை கலைப்பது என்பது கெட்ட சகுனத்தை வர வைக்கும். புறா அணில் போன்றவைகள் வீட்டிற்குள் நமக்கு நன்மைதான் அதிகம் நடைபெறும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications