Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோய்கள் நீங்க..வறுமை விலகி செல்வம் பெருக.. ஆன்மீகம் கூறும் அற்புத பரிகாரங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலருக்கு உடல்நலக்கோளாறுகள் படுத்தி எடுக்கும், சிலருக்கு எல்லாமே தடங்கலாக இருக்கும். வறுமையும் பஞ்சமுமாக இருக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காது. வறுமை நீங்கி செல்வம் பெருக சில பரிகாரங்களைச் செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

செல்வம் பெருகவேண்டும், கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்கி நல்லது நடக்க வேண்டும் வறுமை நீங்க வேண்டும் என்று அனைவருமே விரும்புவார்கள். சிலரது வீட்டில் நோய்களும், கடனும் படுத்தி எடுக்கும், சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணமே தங்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இதனால் மனச்சோர்வும் அழுத்தமும் இருக்கும்.

நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும். காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

குபேர பூஜை

குபேர பூஜை

வியாழக்கிழமை மாலை 4, 5 குபேரகாலம். இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் வரும். செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வழிபட பணம் வரும். ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் வரும். கனகதாரா தோத்திரம் படிக்க பணம் வரும். அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைக்க பணம் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும் செல்வம் தங்கும்.

வெள்ளிக்கிழமை பூஜை

வெள்ளிக்கிழமை பூஜை

வெள்ளிக்கிழமை கிண்ணங்களில் அரிசி, உப்பு, மிளகாய், புளி, பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், மஞ்சள், எண்ணெய், சர்க்கரை, நெய், காய்கறிகள் என அனைத்தையும் வரிசையாக வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த பொருட்கள் குறைவில்லாது நிறைவாக இருக்கும். வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும். வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

பண பீரோவில் பணம் தங்க

பண பீரோவில் பணம் தங்க

தென்மேற்கில் அமைந்த அறையில் பணம், நகை புழங்கும் பீரோவை, கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். மேலும், பீரோவில் மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைத்தால், எந்த தோஷமும் வராது. பணம் பீரோவில் தங்கும்.

மன அழுத்தம் நீங்க பரிகாரம்

மன அழுத்தம் நீங்க பரிகாரம்

மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுவதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். அந்த தண்ணீரை காலையில் எழுந்து மரத்திற்கோ வீட்டிற்கு வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.

துர்சக்தி நீக்கும் மருதாணி

துர்சக்தி நீக்கும் மருதாணி

வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.

தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை


சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும். கணவன், மனைவி இருவரும் ஒரே மெத்தையை தான் பயன்படுத்த வேண்டும். மனைவி கணவனின் இடது பக்கம் படுத்து உறங்க வேண்டும்.

விபத்துகளில் இருந்து தப்பிக்க

விபத்துகளில் இருந்து தப்பிக்க

வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் சிறிது வேப்பிலை சிறிது மஞ்சள் எடுத்து செல்ல அதில் உள்ள பாசிட்டீவ் எனர்ஜியால் எந்த விபத்தும் இன்றி பயணம் இனிமையானதாக இருக்கும். எலுமிச்சம்பழத்தையும் உடன் கொண்டு சென்றால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+