திருப்பதி பிரம்மோற்சவம்.. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு.. புனித நீராடிய பக்தர்கள்
திருப்பதி: கோவிந்தா...கோவிந்தா என்ற முழக்கம் விண்ணை எட்ட திருமலையில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் வலம் வந்தது திருத்தேர். மலையப்பசுவாமி ரதத்தில் எழுந்தருள தங்களின் பிறவிப்பயன் என நினைத்து திருத்தேரினை நேற்றைய தினம் வடம் பிடித்து இழுத்தனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு வராக சாமி கோவில் முக மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம்,ஹாரத்தி ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள் மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

திருப்பதி பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கருடவாகன சேவை
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை கடந்த 1ஆம் தேதி இரவு நடந்தது. கருட சேவையை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மறுநாள் காலையில் அனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்தார். மாலையில் தங்க ரதத்தில் எழுந்தருளிய சுவாமி இரவு கஜ வாகனத்தில் வலம் வந்தார். மறுநாள் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் எழுந்தருளினார்.

பிரம்மாண்ட ரத உற்சவம்
மலையப்பசுவாமியின் ஊர்வலத்தின் முன்னே யானைகள் வலம் வர ஏராளமானோர் பாரம்பரிய நடனங்கள் ஆடி வந்தனர். பிரம்மோற்சவ விழாவின் 8வது நாளான நேற்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பிரம்மாண்ட தேரில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
பிரம்மோற்சவ விழாவின் 9வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது.

விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

பல லட்சம் லட்டு பிரசாதங்கள்
ஏழுமலையானின் பிரம் மோற்சவ விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கருட சேவை நாளன்று மட்டும் பல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. உண்டியல் மூலம் பக்தர்கள் பல கோடிக்கணக்கான ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications